டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

பவானி கூடுதுறையில் பரிகார வழிபாடுகளுக்கு தடை விதிப்பு

பவானி கூடுதுறையில் பரிகார வழிபாடுகள் நடத்த இன்று காலை முதல் இம்மாதம் 31-ம் தேதி வரையில் தடை விதிக்கப்பட்டுள்ளது

News image
Updated On :17 மார்ச் 2020, 7:35 am

DIN

பவானி கூடுதுறையில் பரிகார வழிபாடுகள் நடத்த இன்று காலை முதல் இம்மாதம் 31-ம் தேதி வரையில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், கூடுதுறைக்குச் செல்லும் நுழைவாயில் கதவுகள் பூட்டப்பட்டதால் பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். 

கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் இந்துசமய அறநிலையத்துறை பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. பவானியில் புகழ்பெற்ற சுற்றுலா தலமாகவும் வழிபாட்டுத் தலமாகவும் உள்ள சங்கமேஸ்வரர் கோயிலுக்குள் செல்ல பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இக்கோயிலின் ராஜகோபுரத்துக்கு முன்பாக தனியாக நுழைவயில் அமைக்கப்பட்டு, கிருமிநாசினி கலந்த தண்ணீரால் கைகளைக் கழுவிய பின்னரே கோயிலுக்குள் செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். 

கூட்டமாக செல்லாமல், தனித்தனியே செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. காவிரி, பவானி மற்றும் கண்ணுக்குப் புலப்படாத அமுத நதிகள் சங்கமிக்கும் பவானி கூடுதுறையில் இன்று முதல் 31-ம் தேதி வரையில் பரிகார வழிபாடுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. கூடுதுறைக்குச் செல்லும் நுழைவாயில் கதவுகள் பூட்டப்பட்டு, கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டுள்ளது. இதனால், கூடுதுறையில் புனித நீராடவும், பரிகார வழிபாட்டுக்கும் வந்த பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையால் பவானி சங்கமேஸ்வரர் கோயில் மற்றும் கூடுதுறை வளாகம் வெறிச்சோடிக் காணப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.