புதுச்சேரிக்குள் வெளிமாநில வாகனங்கள் நுழையத் தடை
புதுச்சேரிக்குள் வெளிமாநில வாகனங்கள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது.


புதுச்சேரிக்குள் வெளிமாநில வாகனங்கள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கரோனா வைரஸ் இந்தியாவிலும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கரோனா வைரஸுக்கு தற்போது வரை 332 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 6 பேர் பலியாகியுள்ளனர்.
நாட்டில் கரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்துள்ள நிலையில், அதற்கான தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில் புதுச்சேரியில் நாளை முதல் வரும் 31 ஆம் தேதி வரை தமிழகம் உள்ளிட்ட வெளிமாநில வாகனங்கள் நுழையத் தடை விதித்து அம்மாநில முதல்வர் முதல்வர் நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து முதல்வர் நாராயணசாமி விடுத்துள்ள அறிவிப்பில், அண்டை மாநில அரசு வாகங்களுக்கும் அனுமதியில்லை.மளிகை,காய்கறி போன்ற பொருட்களை கொண்டு வரும் வாகங்கள் உரிய பில் காண்பித்தால் அனுமதிக்கப்படும் என்றார்.
புதுச்சேரி அரசின் பேருந்து உள்ளூரில் மட்டுமே இயக்கப்படும் என்ற முதல்வர் நாராயணசாமி, புதுச்சேரியில் நாளை முதல் 144 தடை உத்தரவு வரும் 31 ம் தேதி வரை தொடரும்.வெளிமாநில பயணிகள் வராமல் தடுக்க இரு சக்கர வாகனம் முதல் அனைத்து வாகனங்களில் சுற்றுலா பயணிகள் வர தடை விதிக்கப்படுகிறது.ஊரடங்கு உத்தரவு தொடர்வது குறித்து அரசு சில மணி நேரங்களில் அறிவிக்கும் என்றார்.
ஏற்னெவே புதுவையில் திங்கள்கிழமை (மாா்ச் 23) முதல் 31-ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படுவதாக அம்மாநில முதல்வர் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...