பரந்தூர் திட்டத்தைக் கைவிடுவது அரசுக்கு பெரும் நிதி இழப்பை ஏற்படுத்தும்! உதயநிதிபள்ளிகளுக்கு 3 வகையான ஸ்டிக்கர் ஒட்டப்படும்: ஆதவ் அர்ஜுனா பேச்சுகொளத்தூர் தொகுதியில் வி.எஸ். பாபு வெற்றியை எதிர்த்து மு.க. ஸ்டாலின் வழக்கு! பால் கொள்முதல் விலையை மேலும் உயர்த்தி வழங்க வேண்டும்: இபிஎஸ் பரந்தூர் விமான நிலைய அறிவிப்பு! திமுக உறுப்பினர்கள் வெளிநடப்புமத்திய பாதுகாப்பு அமைச்சக பெண் அதிகாரி கருவுற்றிருந்த நிலையில் மரணம்! அதிர்ச்சி காரணம்ஓணம் பண்டிகை: சபரிமலை கோயிலில் இன்று நடை திறப்பு கட்டணமில்லா மகளிர் பேருந்து திட்டம் எப்போது? பேரவையில் அறிவித்தார் முதல்வர் விஜய்!பரந்தூர் விமான நிலையம் கைவிடப்படும்! அறிவித்தார் முதல்வர் விஜய்!! ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம்: அன்னபூரணி சூப்பர் 6 திட்டம் தொடங்குவது எப்போது? முதல்வர் விஜய் அறிவிப்பு

வாழ்வாதாரமின்றி நடந்தே ஊர்திரும்பும் கழுதை பால் விற்போர்

கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால், வாழ்வாதாரமின்றி தருமபுரியில் இருந்து பொடி நடையாக சொந்த ஊர் திரும்புவதாக,

Published On :27 ஜனவரி 2024, 9:48 pm IST

சேலம்: கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால், வாழ்வாதாரமின்றி தருமபுரியில் இருந்து பொடி நடையாக சொந்த ஊர் திரும்புவதாக, பெரம்பலூரை சேர்ந்த கழுதை பால் விற்கும் கேசவன் வேதனையுடன் தெரிவித்தார்.

கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அனைத்து கடைகளும், பேருந்து, ரயில் போக்குவரத்து அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள், சமூக இடைவெளியைக் கடைபிடித்து கடைகளில் பொருட்களை வாங்கி சென்றனர். பெரம்பலூரை சேர்ந்த கேசவன், அவரது குடும்பத்தினர் கழுதை பால் விற்று பிழைப்பு நடத்தி வருபவர்கள். 

தருமபுரி வரை கழுதை பால் விற்க சென்றவர்கள், தடை உத்தரவு காரணமாக தற்போது பெரம்பலூர் திரும்பி செல்கின்றனர். 50 மில்லி கழுதைப்பால் ரூ.50-க்கு விற்பனை செய்து பிழைப்பு நடத்தி வரும் கேசவன், ராணி உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் கைவசம் 6 கழுதைகள் உள்ளன. தடை உத்தரவு காரணமாக குடும்பம் சகிதமாக பெரம்பலூர் நோக்கி நடந்து செல்லும் இந்த குடும்பம் சனிக்கிழமை காலை சேலம் நெடுஞ்சாலையைக் கடந்து சென்றது.

தொடர்ந்து வெயிலில் போதிய உணவு இல்லாமல் பயணித்து களைப்புடன் காணப்பட்ட அவர்கள் கூறியது: தடை உத்தரவால் உணவு கிடைப்பது சிரமமாக உள்ளது. போதிய வாழ்வாதாரம் இல்லாமல் குழந்தைகளோடு சொந்தஊருக்கு திரும்பி செல்கிறோம். வழியில் காவல்துறையினர், தன்னார்வலர்கள் உணவு உள்ளிட்ட உதவிகளை செய்தனர். மூன்று நாள்களாக தொடர்ந்து பயணித்து வருகிறோம். 

சாலையோரங்களில் பயணத்தின் போது கிடைக்கும் உணவுகளை சாப்பிட்டு வருகிறோம். மேலும் சாலையோரங்களில் தெரு நாய்கள் துரத்துவதால் வேதனையுடன் மூன்று நாள்கள் பயணித்து வருகிறோம் என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.