மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

கிருஷ்ணகிரியில் கரோனா அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வந்த நபர் பலி

கிருஷ்ணகிரியில் கரோனா அறிகுறியுடன் சிகிச்சைப் பெற்று வந்த நபர் பலியானார். 

News image
கோப்புப் படம்
Updated On :29 மார்ச் 2020, 11:32 am

DIN

கிருஷ்ணகிரியில் கரோனா அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வந்த நபர் பலியானார். 

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம், சவுட்டயள்ளியை அடுத்த வள்ளிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல்(43) என்பவர் கட்டிட தொழிலாளி. கடந்த சில நாட்களாக காய்ச்சல் சளி போன்ற கரோனா வைரஸ் நோய் தொற்று அறிகுறிகளுடன் அவதிப்பட்டு வந்தார்.

இந்தநிலையில் கிருஷ்ணகிரி மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிறிது நேரத்திலேயே சனிக்கிழமை உயிரிழந்தார்.

இத்தகைய நிலையில் காவேரிப்பட்டணம் வட்டார மருத்துவ அலுவலர் ஹரிராம் தலைமையில் 31 பேர் கொண்ட குழுவினர் அந்த கிராமத்தில் முகாமிட்டு, யாருக்காவது கரோனா வைரஸ் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்களா என மருத்துவ பரிசோதனையை மேற்கொண்டனர்.

இத்தகைய நிலையில், தொழிலாளி சக்திவேல் வயிற்றுப்போக்கால் உயிரிழந்ததாகவும் அவர் மதுபோதைக்கு அடிமையாக இருந்ததாகவும் மருத்துவ தகவல்கள் தெரிவித்தன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.