தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

கூத்தாநல்லூர் வட்டத்தில் பள்ளிவாசல்கள் மூடப்பட்டன

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் வட்டத்தில் 21 பள்ளிவாசல்கள் மூடப்பட்டுள்ளன.

News image
Updated On :29 மார்ச் 2020, 11:00 am

DIN

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் வட்டத்தில் 21 பள்ளிவாசல்கள் மூடப்பட்டுள்ளன.

இது குறித்து, பெரியப் பள்ளிவாசல் செயலாளர் ஜே.எம்.ஏ.ஷேக் அப்துல் காதர் கூறியது: கூத்தாநல்லூர், அத்திக்கடை, பொதக்குடி , பூதமங்கலம் உட்பட கூத்தாநல்லூர் வட்டத்தில் 18 பள்ளிவாசல்கள் மற்றும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - துக்குட்பட்ட 3 பள்ளிவாசல்கள்  உள்ளிட்ட 21 பள்ளிவாசல்கள் உள்ளன. அனைத்து பள்ளி வாசல்களிலும் தொழுகைகள் நிறுத்தப்பட்டுள்ளன. பள்ளிவாசல்களும் மூடப்பட்டுள்ளன. 

ஆனால், தொழுகைக்கு முன்பாக பள்ளிவாசல்களிலிருந்து பாங்க் எனச் சொல்லக் கூடிய, அழைப்பு அறிவிப்புக்கான, அறிவிப்பு மட்டும் எப்போதும் போல் எழுப்பப்படும். 2 அல்லது 3 ஹஜ்ரத் மட்டும் பள்ளிவாசல்களில் தொழுகை செய்வார்கள். மற்றவர்கள் அனைவரும் தங்களது இருப்பிடத்திலேயிருந்தே தொழுகை நடத்தச் சொல்லி சொல்லியுள்ளோம். அனைவரும் வீட்டிலேயே தொழுகை நடத்தி வருகிறார்கள். 

Story image

மேலும், இறப்பு நிகழ்ச்சிக்கும் ெநருங்கிய உறவினர்கள் மற்றும் சொந்தங்கள் மட்டும் வந்தால் போதும். மற்றவர்கள்  வீட்டிலிருந்தபடியே, பிரார்த்தனை செய்யும் மாறும் அறிவுறுத்தியுள்ளோம். திருவாரூர் மாவட்ட ஆட்சியரகம், வட்டாட்சியர் மற்றும் நகராட்சி ஆணையர் உள்ளிட்டோர் அடிக்கடி வந்து விசாரித்துச் செல்கிறார்கள். வெளிநாடுகளிலிருந்து 385 பேர் இப்பகுதிக்கு வந்துள்ளதற்கான பெயர் பட்டியல் விவரத்தைக் கொடுத்துள்ளனர். 

வெளிநாட்டிலிருந்து வந்து கூத்தாநல்லூரில் இருப்பவர்களுக்கு, பள்ளிவாசல் சார்பில், நீங்களே உங்களை குறைந்தது 21 நாட்களுக்கு தனிமைப் படுத்திக் கொள்ளுங்கள். அரசுக்கும்  ஒத்துழைப்பு கொடுங்கள் என அறிவுறுத்தப்பட்டுள்ளன. மேலும், தில்லியிலிருந்து ஒரு குழு இங்கு வந்துள்ளனர். அவர்களை அழைத்து, தனிமைப்படுத்திக் கொள்ளாமலும், பரிசோதனை செய்து கொள்ளாமலும் இருப்பது தவறு எனச் சொல்லி, திருவாரூர் மாவட்ட ஆட்சியரகத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Story image

நாளை திங்கள்கிழமை கூத்தாநல்லூர் வந்து பரிசோதனை செய்வதாக தெரிவித்துள்ளனர். கூத்தாநல்லூர் பகுதியில் வறுமையில் இருப்பவர்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் வழங்க, ஆலோசித்து வருகிறோம். கரோனா தொற்று நோயிலிருந்து அனைவரையும் இறைவன்தான் காப்பாற்ற வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.