மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

தில்லியில் இருந்து சேலம் திரும்பிய இருவர்: மருத்துவமனையில் வைத்து கண்காணிப்பு

சேலம் மாவட்டம் கெங்கவல்லியிலிருந்து தில்லி சென்று வந்த இருவர், ஆத்தூர் அரசு மருத்துவமனையில் திங்கள்கிழமை பிற்பகல் முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 

News image
Updated On :30 மார்ச் 2020, 4:26 pm

DIN


சேலம் மாவட்டம் கெங்கவல்லியிலிருந்து தில்லி சென்று வந்த இருவர், ஆத்தூர் அரசு மருத்துவமனையில் திங்கள்கிழமை பிற்பகல் முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 

சேலம் மாவட்டம் கெங்கவல்லி முருகன் கோயில் அருகே வசிக்கும் இப்ராகிம் மகன் முகம்மது அன்வர் (31). அன்வரும் அதே பகுதியில் வசிக்கும் அக்பர் அலி (55) ஆகிய இருவரும் சேர்ந்து கடந்த வாரம், ஒரு இஸ்லாமிய அமைப்பு சார்பில் தில்லியில் நடந்த குடியுரிமைச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்திற்குச் சென்றனர். 

அதில் கரோனா வைரஸ் அதிகம் பாதிப்பிற்குள்ளான இத்தாலியிலிருந்து வந்த மதகுருமார்கள் பங்கேற்றுள்ளனர். அத்தகைய போராட்டத்திற்குச் சென்று விட்டு, ஒரு வார இடைவெளியில் அவர்கள் திங்கள்கிழமை கெங்கவல்லி திரும்பியுள்ளனர். 

இதையடுத்து, தகவலறிந்த கெங்கவல்லி வட்டாட்சியர் சிவக்கொழுந்து தலைமையில், சுகாதாரத் துறையினர், காவல் துறையினர் உதவியுடன் அவர்கள் இருவரையும் அழைத்துச் சென்று, ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு உட்படுத்தி தனிமைப்படுத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.