காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

அடுத்த 3 மாதங்களுக்கு இ.எம்.ஐ வசூலிக்கப்படமாட்டாது: தமிழக நிதித்துறை செயலர்

அடுத்த 3 மாதங்களுக்கு இ.எம்.ஐ வசூலிக்கப்படமாட்டாது என்று தமிழக நிதித்துறை செயலர் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

News image
மத்திய ரிசர்வ் வங்கி
Updated On :31 மார்ச் 2020, 9:21 am

DIN

அடுத்த 3 மாதங்களுக்கு இ.எம்.ஐ வசூலிக்கப்படமாட்டாது என்று தமிழக நிதித்துறை செயலர் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அனைத்து கடைகளும், பேருந்து, ரயில் போக்குவரத்து அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் தலைமைச்செயலகத்தில் தமிழக நிதித்துறை செயலர் கிருஷ்ணன் அளித்த பேட்டியில், அடுத்த 3 மாதங்களுக்கு இ.எம்.ஐ வட்டி உள்ளிட்டவை வங்கிகளால் வசூலிக்கப்படமாட்டாது.

ரிசர்வ் வங்கியின் உத்தரவு அந்தந்த வங்கிகளின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதனை வங்கி வாடிக்கையாளர்கள் இணையதளத்தில் பார்த்து தெரிந்துகொள்ளலாம் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.