நாகையில் நடமாடும் மளிகைக் கடை
கரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் அநாவசியமாக வெளியில் நடமாட தடைவிதிக்கப்பட்டுள்ளது.


கரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் அநாவசியமாக வெளியில் நடமாட தடைவிதிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் பொது மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்கவும் பொது மக்கள் அவற்றை வாங்கவும் மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை எடுத்த வருகின்றன. பல மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் அங்குள்ள கடைகளுடன் ஒப்பந்தம் செய்து பொதுமக்கள் வீட்டிலிருந்து கடைகளுக்கு போன் செய்தால் டோர் டெலிவரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. டெலிவரி கட்டணம் வசூலித்து கொள்ள அனுமதிக்கப் பட்டுள்ளது.
மேலும் சில நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளில் பொது மக்கள் சமூக இடைவெளி காக்க எதுவாக பரந்த வெளிக்காக மார்க்கெட்களை தற்காலிகமாக பேருந்து நிலையங்கள் மற்றும் பள்ளி மைதானங்களுக்கு மாற்றி நடவடிக்கை எடுத்து உள்ளன. இந்நிலையில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் வைத்தீஸ்வரன் கோயில் பேரூராட்சி நிர்வாகம் ஒரு முன்னோடியாக நடமாடும் மளிகைக் கடை மற்றும் காய்கறி கடையினை பொது மக்களின் வீடுகளுக்கே கொண்டு சென்றுள்ளனர்.
சென்றவாரம் நடமாடும் காய்கறி கடையினை தொடங்கினர். நடமாடும் காய்கறி கடைக்கு பொதுமக்களின் அமோக வரவேற்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து செவ்வாய்கிழமை நடமாடும் மளிகைக் கடையினையும் தொடங்கி அசத்தி வருகிறது. பேரூராட்சியின் இந்த முயற்சிக்கு பொது மக்கள் ஒவ்வொரு நாளும் நன்றியும் பாராட்டுகளும் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...