சங்ககிரியில் 3 கரோனா பரிசோதனை சோதனை சாவடிகளில் 185 பேருக்கு பரிசோதனை
கரோனா வைரஸ் பாதுகாப்பு தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையையொட்டி சேலம் மாவட்ட நிர்வாகம், சங்ககிரி வருவாய்த்துறையின்


கரோனா வைரஸ் பாதுகாப்பு தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையையொட்டி சேலம் மாவட்ட நிர்வாகம், சங்ககிரி வருவாய்த்துறையின் சார்பில் சங்ககிரியில் மூன்று இடங்களில் கரோனா வைரஸ் பரிசோதனை சோதனை சாவடிகள் முதன்முறையாக அமைத்து கண்காணிக்கும் பணிகள் ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டுள்ளன.
நண்பகல் ஒரு மணி வரை 185 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன. இப்பணிகள் 24 மணி நேரமும் சுழற்சி அடிப்படையில் நடைபெற உள்ளன. கரோனா வைரஸ் பாதுகாப்பு தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த மார்ச் 24ம் தேதி மாலை 6 மணி முதல் மே 17ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறக்கப்பிக்கப்பட்டுள்ளன. அதனையடுத்து மத்திய, மாநில அரசுகள் சுகாதாரத்துறை மூலம் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
இதனையடுத்து சேலம் மாவட்ட நிர்வாகம், சங்ககிரி வருவாய்த்துறையின் மூலம் சேலம் மாவட்ட எல்லை முடிவு பெற்று நாமக்கல் மாவட்ட எல்லை தொடங்கும் புள்ளிப்பாளையம், சங்ககிரி பழைய பேருந்து நிலையம், குப்பனூர் தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட இடங்களில் சோதனை சாவடிகளை அமைத்து அதில் கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம நிர்வாக உதவியாளர்கள், மருத்துவப்பணியாளர்கள், காவல்துறை ஆகியோர்கள் கொண்ட குழுவினர் அந்த வழியாக செல்லும் லாரிகள், மற்ற வாகனங்களின் ஓட்டுநர்கள், பயணிகளையும் ஞாயிற்றுக்கிழமை நண்பகல் ஒரு மணி வரை 185 பேருக்கு காய்ச்சல் அறியும் கருவியைக் கொண்டு சோதனை செய்தும், ஓட்டுநர்கள் முழு முகவரி அவர்களது தொடர்பு செல்லிட பேசி எண்கள் உள்பட அனைத்தும் பதிவு செய்தனர்.
இப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. பரிசோதனை செய்யப்பட்ட 185 நபர்களுக்கு கரோனா வைரஸூக்கான அறிகுறிகள் தென்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். இப்பணிகளை சங்ககிரி வருவாய் கோட்டாட்சியர் மு.அமிர்தலிங்கம் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பரிசோதனையில் தனிமைபடுத்தப்படக் கூடிய நபர்களை தனிமைப்படுத்துவதற்காக சங்ககிரியிலிருந்து எடப்பாடி செல்லும் சாலையில் உள்ள அரசு மாணவர்கள் விடுதியை சங்ககிரி வட்டார வளர்ச்சி அலுவலர் என்.எஸ்.ரவிச்சந்திரன் தலைமையில் தூய்மை பணியாளர்கள் விடுதி வளாகத்தினை தூய்மைபடுத்தி தயார் செய்து வைத்துள்ளனர்.
தனிமை முகாமில் வடுகப்பட்டி ஆரம்ப சுகாதார மருத்துவர் சுந்தரம் தலைமையில் மருத்துவக்குகுழுவினரும் தயார் நிலையில் உள்ளனர். சேலம் மாவட்டம், சங்ககிரி தேசிய நெடுஞ்சாலையையொட்டி அமைந்துள்ளதால் அத்தியாவசிய தேவைகளுக்காக அதிகமான வாகனங்கள் சென்று வருவதையொட்டி வருவாய்த்துறை, காவல்துறை, சுகாதாரத்துறையினர் அவ்வப்போது அரசு உத்தரவுகளுக்கு தகுந்தாற் போல் வைரஸ் தொற்று பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர் சோதனை சாவடியில் ஈடுபட்டு வரும் அலுவலர்களுக்கு லாரி ஓட்டுநர்கள் மற்ற வாகனங்களின் ஓட்டுநர்கள் ஒத்துழைப்பு அளிக்குமாறு வருவாய்த்துறை அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...