தடை உத்தரவு காலத்திற்கான ஊதியம் வழங்கிட மோட்டார் தொழிலாளர்கள் கோரிக்கை
தனியார் பேருந்து தொழிலாளர்களுக்கு அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியம் மூலம் நிவாரணம் பெற கிடைத்திடவும், தொழிலாளர் அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியங்களில் பதிவு செய்திடவும்,


தனியார் பேருந்து தொழிலாளர்களுக்கு அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியம் மூலம் நிவாரணம் பெற கிடைத்திடவும், தொழிலாளர் அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியங்களில் பதிவு செய்திடவும், தடை உத்தரவை காலத்தில் உண்டான ஊதியம் வழங்கிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்திய வரலாற்றில் எப்போதும் இல்லாத வகையில் கொரோனா தொற்றுநோய் அச்சுறுத்தலால் மே 17-ம் தேதி வரை ஊரடங்கு மற்றும் 144 தடை உத்தரவை பிறப்பிக்கபட்டுள்ள நிலையில் இந்த கொடிய நோயிலிருந்து மேலும் நாம் அனைவரையும் பாதுகாத்து கொள்ள அரசு உத்தரவை தமிழ்நாட்டில் உள்ள அனைவரும் தனியார் பேருந்துகள் பணிபுரியும் தொழிலாளர்கள் கடைபிடித்து வாழ்வாதாரமும் முடங்கியுள்ளது. தமிழ்நாட்டில் இயங்குகின்ற அனைத்து தனியார் பேருந்துகளும் பணிபுரியும் தொழிலாளர்கள் இதுவரை சட்டத்தின் எந்த அரவணைப்பும் இன்றி வேலைக்கு போனால் மட்டுமே ஊதியம் என்ற நிலையில் உள்ளார்கள். இப்போது தனியார் பேருந்துகளும் முடங்கிப் போய்விட்டன. தொழிலாளர்களுக்கு ஊதியம் இல்லை. வருமானம் இல்லாத குடும்பம் வாடுகிறது.
இதுகுறித்து தனியார் மோட்டார் தொழிலாளர் சங்க செயலாளர் ஏ.ராஜசேகர் தெரிவித்தது: தனியார் பேருந்து தொழிலாளர்களுக்கு அமைப்பு சாரா தொழிலாளர்கள் வாரியம் மூலமாக தங்கள் நிவாரண தொகையை அளிக்க தமிழக முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆனால் அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரியத்தில் தமிழ்நாட்டில் ஏராளமான தனியார் பேருந்து தொழிலாளிகள் பதிவு செய்யாமல் இருக்கின்றனர். இந்த தனியார் பேருந்து தொழிலாளர்களுக்கு அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியம் மூலம் நிவாரணம் பெற கிடைத்திடவும், தொழிலாளர் அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியங்களில் பதிவு செய்திடவும், தடை உத்தரவை காலத்தில் உண்டான ஊதியம் வழங்கிடவும் தமிழக முதல்வர் நடவடிக்கை மேற்கொண்டு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்கிறார் ஏ.ராஜசேகர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...