டாஸ்மாக் கடைகளை நிரந்தரமாக மூட வேண்டும்: தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம்
தமிழகத்திலுள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூட வேண்டுமென தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம் வலியுறுத்தி உள்ளது.


தமிழகத்திலுள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூட வேண்டுமென தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம் வலியுறுத்தி உள்ளது.
இதுகுறித்து சங்கத்தின் சிறப்புத் தலைவர் கு.பாலசுப்பிரமணியன் திங்கள்கிழமையன்று கடலூரில் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது, கரோனா பாதிப்பினை முன்னிட்டு தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகளில் ஒன்றான மதுபானக் கடைகளை மூடியதை சங்கம் வரவேற்கிறது. மதுபான கடைகள் மூடப்பட்டதால் சமூகத்தில் கொலை, கொள்ளை, பாலியல் உள்ளிட்ட குற்றங்கள் வெகுவாக குறைந்துள்ளன. இதனை யாரும் மறுக்க முடியாது.
தமிழகத்தின் சமூக சூழ்நிலையை கருத்தில் கொண்டு பார்க்கும் போது ஏழை, எளிய மக்கள் சம்பாதிக்கும் பணத்தை மதுபானத்திற்கே செலவழித்து வருவதால் இரண்டு தலைமுறைகள் சீரழிக்கப்பட்டுள்ளது. இதனை பரிசீலனை செய்து தமிழக அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தின் உயர்மட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் டாஸ்மாக் மதுபானக் கடைகளை தமிழக அரசு திறக்கக் கூடாது என்ற முடிவினை எடுத்துள்ளோம்.
டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடப்படுவதால் ஏற்படும் பொருளாதார இழப்பை சீர்செய்வதற்கு பல்வேறு வழிமுறைகள் உள்ளன. அதனை பயன்படுத்தி பொருளாதாரத்தை மேம்படுத்திக் கொள்ளலாம். தேவைப்பட்டால் அந்த வழிமுறைகளை எங்களது சங்கம் தெரிவிக்கும். மதுபானக் கடைகள் மூடப்படுவதால் கள்ளச்சாராயம் விற்பனை, வெளிமாநிலங்களிலிருந்து இங்கு மது வகைகள் வருவதை தடுக்கும் வகையிலான நிர்வாகம் தேவைப்படுகிறது.
எங்களது சங்க தீர்மானப்படி மதுக்கடைகளை மூட வேண்டும், மதுவிலக்கு கொள்கையை பின்பற்ற வேண்டும், கள்ளச்சாராயம் காய்ச்சுவதை தடுக்க வேண்டும். இக்கோரிக்கைகளை ஏற்கும் பட்சத்தில் டாஸ்மாக்கில் பணியாற்றி வரும் சுமார் 25 ஆயிரம் தொழிலாளர்களை கல்வித்தகுதியின் அடிப்படையில் அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களில் நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கையையும் வலியுறுத்துகிறோம் என்றார்.
அப்போது சங்கத்தின் மாநிலதலைவர் கு.சரவணன் உடனிருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...