கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

திருப்பூரில் தூய்மைப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

திருப்பூரில் ஆதித்தமிழர் பேரவையின் தூய்மைத் தொழிலாளர் அணி சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :4 மே 2020, 4:41 am

DIN

திருப்பூரில் ஆதித்தமிழர் பேரவையின் தூய்மைத் தொழிலாளர் அணி சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருப்பூரில் ஆதித்தமிழர் பேரவையின் தூய்மை தொழிலாளர் அணி சார்பில் அனுப்பர்பாளையம் 1 ஆவது மண்டல அலுவலகம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாடட்த்துக்கு மாநில துணைச் செயலாளர்சோழன் தலைமை வகித்தார். இதில், கரோனா நோய்த்தொற்றை தடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து தூய்மைப்பணியாளர்களுக்கும் முழு பாதுகாப்பு கவச உடைகள் மற்றும் முகக் கவசங்கள் வழங்க வேண்டும். 

அனைத்து தொழிலாளர்களுக்கும் பி.சி.ஆர். மருத்துவப் பரிசோதனை செய்ய  வேண்டும். ஒவ்வொரு தொழிலாளருக்கும் ரூ.50 லட்சம் மருத்துவக் காப்பீடு என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். இதே கோரிக்கைகளை வலியுறுத்தி 80க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். 

இந்த ஆர்ப்பாட்டத்தில், மாநில துணைப் பொதுச்செயலாளர் விடுதலை செல்வன், வடக்கு மாவட்டச் செயலாளர் ஆறுமுகம், வடக்கு மாவட்டத் தலைவர் சூரியபிரகாஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.