கூடங்குளம் முதல் அணுஉலையில் மீண்டும் மின்உற்பத்தி தொடக்கம்
திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் 1000 மெகாவாட் திறன் கொண்ட இரு அணு உலைகள் உள்ளன. இவை வருடாந்திர பராமரிப்பு பணிகளுக்காக நிறுத்தப்பட்டு


திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் 1000 மெகாவாட் திறன் கொண்ட இரு அணு உலைகள் உள்ளன. இவை வருடாந்திர பராமரிப்பு பணிகளுக்காக நிறுத்தப்பட்டு பணிகள் முடிந்ததும் மீண்டும் மின் உற்பத்தியை தொடங்குவது வழக்கம்.
அதன்படி கூடங்குளம் அணுமின் நிலையத்தில் முதல் அணு உலையில் கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி வருடாந்திர பராமரிப்பு பணிக்காக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. தற்போது நிலவும் சூழ்நிலையில் பணியாளர்களின் பற்றாக்குறையினால் வருடாந்திர பராமரிப்பு பணி அடுத்த மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
எனவே திங்கள்கிழமை காலை முதல் மின் உற்பத்தி மீண்டும் தொடங்கியது. தற்போது 200 மெகாவாட் மின் உற்பத்தியை எட்டியுள்ளது. ஏற்கனவே இரண்டாம் அணு உலையில் 900 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. இந்த அணு உலைகளின் மூலம் சுமார் 950 மெகாவாட் மின்சாரம் தமிழ் நாட்டிற்கு கிடைக்கும் வாய்ப்புள்ளதாக அணுஉலை வட்டாரங்கள் தெரிவித்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...