பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!
/

சங்ககிரி சோதனை சாவடிகளில் 522 வாகனங்கள் பரிசோதனை: 3 கூலித்தொழிலாளர்கள் தனிமைப்படுத்தல்

கரோனா வைரஸ் பாதுகாப்பு தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையையொட்டி சேலம் மாவட்டம், சங்ககிரியில் செயல்பட்டு வரும் கரோனா வைரஸ் பரிசோதனை சோதனை சாவடிகளில்

News image
Updated On :27 ஜனவரி 2024, 4:35 pm

DIN

கரோனா வைரஸ் பாதுகாப்பு தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையையொட்டி சேலம் மாவட்டம், சங்ககிரியில் செயல்பட்டு வரும் கரோனா வைரஸ் பரிசோதனை சோதனை சாவடிகளில் செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட  522 வாகனங்களில் வந்தவர்களை பரிசோதனை செய்ததில் 3 கூலித்தொழிலாளர்களுக்கு வழக்கத்தை விட காய்ச்சல் அதிகமாக காய்ச்சல் அறியும் கருவியில் காட்டியதால் அனைவரும் தனிமுகாமில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.  

கரோனா வைரஸ் பாதுகாப்பு தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த மார்ச் 24ம் தேதி மாலை 6 மணி முதல் மே 17ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறக்கப்பிக்கப்பட்டுள்ளன. அதனையடுத்து மத்திய, மாநில அரசுகள் சுகாதாரத்துறை மூலம் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.  இதனையடுத்து சங்ககிரி யில் புள்ளிப்பாளையம்,  சங்ககிரி பழைய பேருந்து நிலையம், குப்பனூர் தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட  இடங்களில் சோதனை சாவடிகளை அமைக்கப்பட்டு அந்த வழியாக செல்லும் லாரிகள், மற்ற வாகனங்களின் ஓட்டுநர்கள், பயணிகளையும் சோதனை செய்து வருகின்றனர். 

செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட சோதனையில் கேரள மாநிலத்திலிருந்து நெல் அறுவடை இயந்திரத்தை லாரியில் ஏற்றிக்கொண்டு ஆத்தூர் நோக்கி சென்ற  லாரி ஓட்டுநர், கூலித்தொழிலாளர்கள் சென்றுள்ளனர்.  அவர்களை குப்பனூர் சோதனை சாவடியில் உள்ள மருத்துவக்குழுவினர் காய்ச்சல் அறியும் கருவியில் பரிசோதனை செய்துள்ளனர். அதில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் 3 பேருக்கும் காய்ச்சல் வழக்கத்தைவிட அதிமாக இருந்துள்ளன. அதனையடுத்து அவர்கள் அனைவரும் சங்ககிரியில் அரசு மாணவர் விடுதியில் அமைக்கப்பட்டுள்ள தனிமை முகாமிற்கு அனுப்பி வைத்து தனிமைபடுத்தப்பட்டுள்ளனர்.

தொழிலாளர்களுக்கு வடுகப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் ரமேஷ்குமார் தலைமையில் மருத்துவக்குழுவினர் கரோனா மருத்துவ பரிசோதனைகளை செய்து பரிசோதனை முடிவுக்காக சேலம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். திங்கள்கிழமை பரிசோதனை  செய்யப்பட்ட 7 சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு பரிசோதனை முடிவில் கரோனா தொற்று இல்லை என தெரிய வந்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.