ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

கோயம்பேடு சந்தையோடு தொடர்புடையவர்கள் பரிசோதனைக்கு தாமாக முன்வர வேண்டும்: ஓபிஎஸ் கோரிக்கை

கோயம்பேடு சந்தையோடு தொடர்புடையவர்கள் தாமாக முன்வந்து கரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார். 

News image

கோயம்பேடு (கோப்புப்படம்)

Updated On :5 மே 2020, 11:49 am

கோயம்பேடு சந்தையோடு தொடர்புடையவர்கள் தாமாக முன்வந்து கரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார். 

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கரோனா பாதிப்பு எண்ணிக்கை பன்மடங்காக உயர்ந்துள்ளது. இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது சென்னை கோயம்பேடு சந்தை. இங்குள்ள வியாபாரிகள் சிலருக்கு தொற்று உறுதியானதை அடுத்து, கோயம்பேடு சந்தையோடு தொடர்புடைய பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கடந்த சில தினங்களாக நாள் ஒன்றுக்கு கோயம்பேடு சந்தை தொடர்புடைய நூற்றுக்கணக்கானோருக்கு தொற்று உறுதியாகும் நிலையில், பரவலைக் கட்டுப்படுத்த கோயம்பேடு சந்தை வியாபாரிகள், சந்தைக்கு சென்று வந்தவர்கள், அவர்களோடு தொடர்புடையவர்கள் தாமாக பரிசோதனைக்கு முன்வர வேண்டும் என்று மாவட்ட நிர்வாகங்கள் கேட்டுக்கொண்ட நிலையில் தற்போது தமிழக அரசு சார்பில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.