ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

காஞ்சிபுரத்தில் இன்று மட்டும் 43 பேருக்கு கரோனா; 31 பேர் கோயம்பேடு சந்தையுடன் தொடர்புடையவர்கள்

கோயம்பேடு சந்தை வாயிலாக காஞ்சிபுரத்தில் மேலும் 29 பேருக்கு இன்று கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :6 மே 2020, 9:52 am

காஞ்சிபுரத்தில் இன்று ஒரேநாளில் 43 பேருக்கு இன்று கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை கோயம்பேடு சந்தை மூலமாக சென்னை மற்றும் அண்டை மாவட்டங்களில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் காஞ்சிபுரத்தில் இன்று ஒருநாளில் 43 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 31 பேர்  கோயம்பேடு சந்தையுடன் தொடர்புடையவர்கள்

கோயம்பேடு சந்தை வாயிலாக காஞ்சிபுரத்தில் ஏற்கெனவே 7 பேருக்கு தொற்று உறுதியான நிலையில், இன்று 31 பேரையும் சேர்த்து அங்கு கோயம்பேடு மார்க்கெட் மூலமாக மட்டும் 38 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

மொத்தமாக கோயம்பேடு மார்க்கெட் தொடர்புடைய 400 பேருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

இதனால் மாவட்டத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 85 ஆக உயர்ந்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.