நெல்லை, கன்னியாகுமரியில் கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்துக்கு நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிருஇடங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக செய்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்துக்கு நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிருஇடங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக செய்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்துக்கு கோவை, நீலகிரி, சேலம், கரூர், மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், விருதுநகர் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.
மேலும் அடுத்த 48 மணி நேரத்துக்கு நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிருஇடங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை..
குமரிகடல் மற்றும் மாலத்தீவை ஒட்டிய பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 35 - 45 கி.மீ. வேகத்தில் வீசக் கூடும் என்பதால், அடுத்த 24 மணி நேரத்துக்கு மீனவர்கள் இப்பகுதிகளில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...