6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மதுக்கடைகள் திறப்பு: கருப்புக் கொடி ஏந்தி எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சிகள்

கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் சில தளர்வுகளுடன் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருக்கும்

News image
Updated On :7 மே 2020, 7:12 am

DIN

சென்னை: கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் சில தளர்வுகளுடன் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருக்கும் நிலையில், தமிழகத்தில் இன்று மதுபானக் கடைகள் திறக்கப்படுவதற்கு கருப்புக் கொடி ஏந்தி எதிர்க்கட்சிகள் தங்களது எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தனது இல்லத்தில் கருப்புக் கொடி ஏந்தி தனது எதிர்ப்பை பதிவு செய்தார். சமூக இடைவெளியைப் பின்பற்றி கருப்புக் கொடி ஏந்தி மதுபானக் கடைகள் திறக்கப்படுவதற்கு தங்களது எதிர்ப்பை பதிவு செய்யுமாறு ஸ்டாலின் நேற்று வலியுறுத்தியிருந்தார்.

அதன்படி, எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரும் அவர்களது வீடுகளில் இன்று கருப்புக் கொடி ஏந்தி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

Story image

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தலைமையில் இன்று மதுக்கடைகள் திறப்புக்கு எதிராக கருப்புக் கொடி ஏந்தி எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

Story image

மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, டாஸ்மாக் மதுக்கடைகளைத் திறக்கும் தமிழக அரசுக்கு எதிராக இன்று தனது இல்லத்தின் முன்பு கறுப்புச் சட்டை அணிந்து முழக்கங்கள் எழுப்பி அறப்போர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.  
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.