6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மது வாங்க ஆதார் வேண்டாம்: நீதிமன்றத்தில் தமிழக அரசு முறையீடு

​மது வாங்க ஆதார் எண் கட்டாயம் என்ற நிபந்தனையை தளர்த்தக் கோரி தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளது.

News image
Updated On :7 மே 2020, 1:32 pm

DIN


மது வாங்க ஆதார் எண் கட்டாயம் என்ற நிபந்தனையை தளர்த்தக் கோரி தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளது.

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறப்பதற்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த உயர் நீதிமன்றம், நிபந்தனைகளுடன் கடைகள் திறக்க அனுமதியளித்தது. உயர் நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளில் மது வாங்க ஆதார் எண் கட்டாயம் என்பதும் இடம்பெற்றிருந்தது.

இந்த நிலையில் பலரிடம் ஆதார் அட்டை இல்லாததால், மது வாங்க ஆதார் கட்டாயம் என்ற நிபந்தனையை தளர்த்தக் கோரி தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளது. இதே கோரிக்கையை வலியுறுத்தி டாஸ்மாக் தரப்பிலும் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, இதுதொடர்பான முறையீடுகள் அனைத்தும் மே 14-ஆம் தேதி விசாரிக்கப்படும் என்று உயர் நீதிமன்றம் அறிவித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.