தமிழக அரசின் உத்தரவின் பேரில் நேற்று திருவள்ளூர் மாவட்டத்தில் 40 மதுபானக் கடைகள் திறக்கப்பட்டன. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் உள்ள மதுபானக் கடையை திறக்க அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில் திருவள்ளூர் அடுத்த மெய்யூர் கிராமத்தில் உள்ள மதுபானக் கடைக்கு மெய்யூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ளவர்கள் மட்டுமல்லாது சென்னை, சென்னை புறநகர்ப் பகுதிகளிலிருந்து 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குவிந்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மெய்யூர், இராஜபாளையம், சோமதேவன்பட்டு ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பெண்கள் இன்று கடையை முற்றுகையிட முயன்றனர்.