தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

ஜாமீன் கிடைத்தும் வெளியே வரமுடியாத நிலையில் திருவாரூர் முருகன் 

திருச்சி பிரபல நகைக்கடை திருட்டில் ஜாமீன் கிடைத்தும் வெளியே வரமுடியாத நிலையில் திருவாரூர் முருகன் பெங்களூரூ சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

News image
Updated On :9 மே 2020, 1:24 pm

DIN

திருச்சி பிரபல நகைக்கடை திருட்டில் ஜாமீன் கிடைத்தும் வெளியே வரமுடியாத நிலையில் திருவாரூர் முருகன் பெங்களூரூ சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் நகைக்கடையில் கடந்த ஆண்டு அக்.2 ஆம் தேதி இரவு பக்கவாட்டு சுவரை துளையிட்டு 13 கிலோ நகைகளை திருடப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்தில் திருவாரூரைச் சேர்ந்த முருகன், அவரது அக்கா மகன் சுரேஷ், கணேசன் ஆகியோர் கொண்ட கும்பல் ஈடுபட்டது தெரிய வந்தது.  இதே கும்பல் திருச்சி சமயபுரம் நெம்பர் 1 டோல்கேட் பஞ்சாப் நேஷனல் வங்கியிலும் திருடியது தெரிய வர திருச்சி தனிப்படை காவல்துறையினர் அவரை தீவிரமாக தேடினர். சுரேஷ் செங்கம் நீதிமன்றத்திலும், முருகன் பெங்களூரூ நீதிமன்றத்திலும்  சரணடைந்தனர்.  இவர்களிடமிருந்து கிலோ கணக்கில் நகைகள் மீட்கப்பட்டன. பின்னர், முருகன் பெங்களூரூ சிறையில் அடைக்கப்பட்டார்.  இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்பு அவரது உடல்நிலை மோசமடைந்ததால், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். மருத்துவர்கள் அவருக்கு ஒருமாத காலம் அவகாசம் கொடுத்து உள்ளனர். அவருடைய இடது கை, கால் வாதநோயால் செயல்படாமல் போய்விட்டது. வாய்பேச முடியாத நிலையில் தற்போது முருகன் உள்ளார்.
இதையடுத்து அவரது வழக்குரைஞர் ஹரிபாஸ்கர், திருச்சி முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். திருச்சி நகைக்கடை வழக்கி பிணையில் விட  கோரிய மனு மீதான விசாரணையில் வெள்ளக்கிழமை மாலை முருகனுக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி கார்த்திக் ஆசாத் உத்தரவிட்டார். பிரபல நகைக்கடை திருட்டு வழக்கில் ஜாமீன் வழங்கி திருச்சி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையிலும் வெளியே வரமுடியாத நிலையில் திருவாரூர் முருகன் பெங்களூரூ  சிறையிலேயே உள்ளார்.
இதுகுறித்து, வழக்குரைஞர் ஹரிபாஸ்கர் கூறியதாவது: திருச்சி நகைக்கடை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள திருவாரூர் முருகனுக்கு எதிராக கோட்டை காவல்துறையினர் 134 நாள்கள் ஆகியும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவில்லை. இதையடுத்து  ஜாமீன் வழங்குமாறு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தேன். மனுவின் பேரில் ஜாமீன் கிடைத்தாலும் திருச்சியில் பஞ்சாப் நேஷனல் வங்கி திருட்டு வழக்கு, பாலக்கரையில் திருட்டு வழக்கு என திருச்சியில் மேலும் இரு வழக்குகள் உள்ளன. இதே போல சென்னையில் 12 வழக்குகளும், கர்நாடகாவில் 46 வழக்குகளும், ஆந்திராவில் ஒரு வழக்கும் உள்ளது. இந்த வழக்குகளில் ஜாமீன் கிடைத்தால் மட்டுமே வெளியே வர முடியும். ஆகையால் திருச்சியில் வழங்கப்பட்டுள்ள ஜாமீன் அடிப்படையில் மற்ற வழக்குகளில் ஜாமீன் கேட்டு சம்மந்தப்பட்ட நீதிமன்றங்களில் திங்கள்கிழமை முதல் மனு தாக்கல் செய்ய உள்ளோம். இன்னும் ஒரு வார காலத்திற்குள் அனைத்து வழக்குகளிலும் ஜாமீன் கிடைத்துவிட வாய்ப்புள்ளது என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.