தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

குளிர்பான தொழிற்சாலையால் குடிநீர் தட்டுப்பாடு, விவசாயம் பாதிப்பு: பொதுமக்கள் புகார்

திருவள்ளூர் அருகே தனியார் குளிர்பான தொழிற்சாலை அனுமதித்த அளவைவிட அதிகளவில் நிலத்தடி நீரை உறிஞ்சுவதால் கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

News image
Updated On :13 மே 2020, 12:31 pm

DIN


திருவள்ளூர் அருகே தனியார் குளிர்பான தொழிற்சாலை அனுமதித்த அளவைவிட அதிகளவில் நிலத்தடி நீரை உறிஞ்சுவதால் கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு மற்றும் விவசாய பணிகள் மேற்கொள்ள நீர் ஆதாரம் கிடைக்காத நிலையில் அவதிக்குள்ளாகி வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து நேமம், குத்தம்பாக்கம் கிராம பொதுமக்கள் சார்பில் அப்பகுதியின் ஒன்றிய குழு உறுப்பினர் என்.பி. மாரிமுத்து புதன்கிழமை நேரில் பூந்தமல்லி சட்டப்பேரவை உறுப்பினர் கிருஷ்ணசாமி ஆகியோரிடம் அளித்த மனுவில் தெரிவித்திருப்பதாவது.

திருவள்ளூர் அருகே பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியம், நேமம் கிராமத்தில் பல்வேறு வகையான குளிர்பானங்கள் தயார் செய்யும் தனியார் தொழிற்சாலை கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் குளிர்பான தொழிற்சாலைக்கு நாள்தோறும் 1.50 லட்சம் லிட்டர் தண்ணீர் மட்டுமே எடுத்துக் கொள்ள அனுமதித்த நிலையில் அரசின் அனுமதியை மீறி நாள்தோறும் 30 லட்சம் தண்ணீர் எடுத்து வருகின்றனர்.

இதனால் இப்பகுதியில் உள்ள குத்தம்பாக்கம், நேமம் உள்ளிட்ட சுற்றுப் பகுதிகளில் விவசாயத்தையே முழுவதுமாக நம்பி வாழ்ந்து வருகின்றனர். அவ்வகையில் இப்பகுதி கிராமங்களில் மட்டும் 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயமும் நடைபெற்று வருகிறது. இதுபோன்று கூடுதலாக நிலத்தடி நீரை உறிஞ்சுவதால் கோடைக்காலங்களில் இப்பகுதி கிராமங்களில் பம்பசெட்களில் நீர் ஆதாரம் கிடைக்காததால் விவசாயம் செய்ய முடியாத நிலையும் ஏற்படுகிறது.

இதேபோல், கிராமங்களிலும் ஆழ்துளைக் கிணறுகளில் நீர் ஆதாரம் குறைந்து குடிநீர் தட்டுப்பாடும் ஏற்படுகிறது. மேலும், இந்த தொழிற்சாலைகளில் இருந்து கழிவு நீரை கூவம் ஆற்றில் விடுவதால் துர்நாற்றம் ஏற்படுகிறது. அதோடு, அப்பகுதியில் யாரும் குடியிருக்க முடியாத நிலையும் ஏற்படுகிறது.

தற்போதைய நிலையில் கடந்த 48 நாள்களாக தொழிற்சாலை இயங்காத நிலையில் விவசாய பம்ப்செட்களிலும், கிராமங்களில் குடிநீர் ஆழ்துளைக் கிணறுகளிலும் நீர் ஆதாரம் அதிகரித்துள்ளது. அதோடு, குடிநீரும் உவர்ப்பாக இல்லாமல் சுவையாகவும் உள்ளது.

இதுபோன்ற சூழ்நிலையில் குளிர்பான தொழிற்சாலையில் மாங்கனிகள் மூலம் புதுவிதமான குளிர்பானம் தயார் செய்வதற்கான பிரிவும் கூடுதலாக தொடங்கவும் உள்ளனர். ஏற்கெனவே பொதுப்பணித்துறை நிலத்தடி ஆதாரப்பிரிவில் வாங்கிய அனுமதியை விட கூடுதலாக நிலத்தடி நீர் சுரண்டப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதனால், இந்த தொழிற்சாலைக்கு அரசின் அனுமதித்த அளவு மட்டும் நீர் எடுக்கவும், கூடுதலாக பழச்சாறு தயார் செய்யும் பிரிவுக்கு அனுமதிக்கக் கூடாது என சட்டப்பேரவை உறுப்பினரிடமும் அளித்த மனுவில் அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.