காரைக்குடி அருகே ரெட் கிராஸ் சொசைட்டி மூலம் மாற்றுத் திறனாளிகளுக்கு அரிசி, மளிகைப் பொருள்கள் வழங்கல்
காரைக்குடி அருகே சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் ரெட் கிராஸ் சொசைட்டி மூலம் மாற்றுத் திறனாளிகளுக்கு அரிசி, மளிகைப் பொருள்கள் வழங்கப்பட்டது.


காரைக்குடி அருகே சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் ரெட் கிராஸ் சொசைட்டி மூலம் மாற்றுத் திறனாளிகளுக்கு அரிசி, மளிகைப் பொருள்கள் வழங்கப்பட்டது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே சாக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இந்திய செஞ்சிலுவைச் சங்க சிவகங்கை மாவட்டக் கிளை சார்பில் 50 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா 5 கிலோ அரிசி மற்றும் மளிகைப் பொருள்களை காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத் துணைவேந்தர் நா.ராஜேந்திரன் புதன்கிழமை வழங்கி நிகழ்வை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் தேவகோட்டை கோட்டாச்சியர் சுரேந்திரன், காரைக்குடி வட்டாட்சியர் பாலாஜி, சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் சரண்யா செந்தில்நாதன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல வாழ்வு அலுவலர் பூ.சரவணக்குமார், செஞ்சிலுவைச் சங்க மாவட்டத் தலைவர் சொ.பகீரத நாச்சியப்பன், துணைத் தலைவர் வி. சுந்தரராமன், அழகப்பா பல்கலைக்கழக ஒய்.ஆர்.சி மண்டல ஒருங்கிணைப்பாளர் ஜி. விநாயகமூர்த்தி, செஞ்சிலுவைச் சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் த. சித்ரா, மாவட்டச் செயலாளர் அ.அனந்தகிருஷ்ணன், பொருளாளர் கே. ராமமூர்த்தி, சாக்கோட்டை ஊராட்சி ஒன்றிய ஆணையர் சு. திருப்பதிராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர் எஸ். ஸ்ரீதர், மாற்றுத்திறனாளி நல அலுவலர் பி. சரவணகுமார், பி.வி. சுவாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பொருள்களை வழங்கினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...