கரோனா வைரஸ் பரவல், உலகப் பொருளாதாரச் சூழலில் ஏற்படுத்தியுள்ள விளைவுகளால், சில நாடுகளில் உள்ள தொழில் நிறுவனங்கள் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு இடம் பெயர முடிவு செய்துள்ளன. இது போன்ற சோதனையான தருணங்கள்தான் பல வரலாற்றுத் திருப்பங்களை ஏற்படுத்தித் தரும். எனவே, இடம்பெயரும் நிறுவனங்களை, தமிழ்நாட்டிற்கு ஈர்க்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள, தலைமைச் செயலாளர் தலைமையில், அரசு அலுவலர்கள், ஜப்பான், கொரியா, சிங்கப்பூர், அமெரிக்கா மற்றும் தைவான் ஆகிய நாடுகளைச் சார்ந்த தொழில் கூட்டமைப்பினர் அடங்கிய சிறப்பு பணிக் குழுவை ஏற்படுத்தியுள்ளேன்.