மத்திய படை தாக்குதலில் வாக்காளர் பலி - திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டுதவெக : 98 - 120 இடங்களில் வெற்றி வாய்ப்பு: இந்தியா டுடே - ஆக்ஸிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புதமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைக்கும்: இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புஎங்கே தவறு நடந்தது? முதல் தோல்வி குறித்து பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் பதில்!
/

விழுப்புரம் அருகே ஜன்னல் கம்பியை உடைத்து வங்கியில் கொள்ளை முயற்சி

விழுப்புரம் அருகேயுள்ள இந்தியன் வங்கியில் கொள்ளை முயற்சி நடந்திருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News image
Updated On :16 மே 2020, 9:07 am

விழுப்புரம் அருகேயுள்ள இந்தியன் வங்கியில் கொள்ளை முயற்சி நடந்திருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் அருகே சிந்தாமணி கிராமத்திலுள்ள இந்தியன் வங்கிக் கிளையில், அதிகாலை வந்த மர்ம நபர்கள் வங்கியின் பக்கவாட்டு பகுதியிலிருந்த ஜன்னல் கம்பிகளை உடைத்து உள்ளே சென்று திருட முயற்சித்துள்ளனர்.

சத்தம் கேட்டதால் அச்சம் அடைந்த கொள்ளையர்கள் தப்பி ஓடிவிட்டனர். அதிகாலை வந்து பார்த்த வங்கி ஊழியர்கள் போலீசுக்கு தகவல் அளித்தனர்.

விழுப்புரம் தாலுகா காவல் துறையினர் விசாரணை நடத்தினர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் துணைக் கண்காணிப்பாளர் சங்கர் ஆகியோர் நேரில் சென்று விசாரணை நடத்தினர். இரவு பாதுகாவலர் நியமிக்கும்படி காவல்துறை அறிவுறுத்தினர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.