டாஸ்மாக் கடைகள் திறப்பு நேரம் 2 மணி நேரம் நீட்டிப்பு
தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறந்திருக்கும் நேரம் 2 மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.


சென்னை: தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறந்திருக்கும் நேரம் 2 மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கரோனா தொற்று காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு நான்காவது முறையாக நீட்டிக்கப்பட்டிருக்கிறது.
இதற்கிடையே கடந்த 40 நாட்களுக்கும் மேலாக மூடப்பட்டிருந்த டாஸ்மாக் கடைகள் உச்ச நீதிமன்றத்தின் அனுமதியோடு கடந்த வாரம் திறக்கப்பட்டன. இந்த நிலையில், டாஸ்மாக் கடைகளின் திறப்பு நேரம் நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை டாஸ்மாக் கடைகள் திறந்திருக்கும் நேரம் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை என இருந்த நிலையில் இரண்டு மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இனி டாஸ்மாக் கடைகள் இரவு 7 மணி வரை திறந்திருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்ட முதல் நாளில் ரூ.163 கோடியும், 2வது நாளில் ரூ.133 கோடிக்கு விற்பனையானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...