மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

தமிழகத்தில் புதிதாக 743 பேருக்கு கரோனா தொற்று

​தமிழகத்தில் புதிதாக 743 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :20 மே 2020, 1:17 pm

DIN


தமிழகத்தில் புதிதாக 743 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிப்புக்குள்ளானோர், பலியானோர், குணமடைந்தோர் உள்ளிட்டவை அடங்கிய தரவுகளை மாநில சுகாதாரத் துறை செய்திக் குறிப்பு மூலம் வெளியிட்டுள்ளது. இதன்படி தமிழகத்தில் புதிதாக 743 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் மகாராஷ்டிரத்திலிருந்து வந்தவர்கள் 83. இதைத் தொடர்ந்து தமிழகத்தில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 13, 191 ஆக உயர்ந்துள்ளது.

இன்று மேலும் 3 பேர் பலியானதையடுத்து, மொத்தம் பலியானோரின் எண்ணிக்கை 87 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம், இன்று ஒரே நாளில் 987 பேர் குணமடைந்துள்ளனர். இதைத் தொடர்ந்து மொத்தம் குணமடைந்தோரின் எண்ணிக்கை 5,882 ஆக உயர்ந்துள்ளது.

இன்றைய தேதியில் தமிழகத்தில் மொத்தம் 7,219 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

தமிழகத்தில் இன்று 11,441 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தமிழகத்தில் இதுவரை பரிசோதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,43,793 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று புதிதாக பாதிக்கப்பட்டதில் அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 557 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி கண்டறியப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.