எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

காட்டுமன்னார்கோவில் வட்டத்தில் குடிமராமத்து பணி தொடக்கம்

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் உடையார் குடி மாரியம்மன் கோவில் அருகே தமிழக முதல்வரின் குடிமராமத்து பணி தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image
காட்டுமன்னார்கோவில் அருகே உடையார்குடி வாய்க்காலில் குடிமராமத்து பணியைத் தொடங்கி வைத்தார் கே.ஏ.பாண்டியன் எம்எல்ஏ
Updated On :20 மே 2020, 12:57 pm

DIN

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் உடையார் குடி மாரியம்மன் கோவில் அருகே தமிழக முதல்வரின் குடிமராமத்து பணி தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.

விழாவிற்கு காட்டுமன்னார்கோவில் சட்டப்பேரவை உறுப்பினர் நாக. முருகுமாறன் தலைமை வகித்துத் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு சிதம்பரம் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் பி.சாம்ராஜ் முன்னிலை வகித்தனர்.

வடவாற்றில் இருந்து பிரியும் கிளை வாய்க்காலான சாக்கடை போன்று காணப்படும்  உடையார்குடி வாய்க்கால் உள்ளிட்ட 5 வாய்க்கால்கள் 26 லட்சம் நிதியில் சுமார் 27 கிலோ மீட்டர்  தூர் வாரப் படுகிறது. இதனால் மழைக்காலங்களில் காட்டுமன்னார்கோவில் நகரப்பகுதி, உடையார்குடி, ராமர் கோட்டகம், ருத்திர சோலை, உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் வெள்ளத்தால் பாதிக்கும் நிலை ஏற்படாது. 

மேலும் இந்த கிராமங்களில்  வரும் காலங்களில் விளை நிலங்களில் தங்குதடையின்றி பாசனம் பெற்று விவசாயப் பணிகள் சிறப்பாக நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர். நிகழ்ச்சியில் கொள்ளிடம் வடிநில கோட்ட உதவி செயற்பொறியாளர்  எஸ்.அருணகிரி, உதவிப் பொறியாளர்  டி.வெற்றிவேல், ஒன்றியச்செயலாலர் வாசு முருகையன் மற்றும் நிர்வாகிகள்,எம்ஜிஆர் தாசன் ,பி.எம்.எஸ். அசோகன், எஸ்.தோதாத்திரி, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.