திருப்பூரில் ஆட்டோ ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் ஆட்டோக்களை இயக்க அனுமதி வழங்கக்கோரி ஆட்டோ ஓட்டுநர்கள் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூரில் ஆட்டோ ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டம்
Published on
Updated on
1 min read

திருப்பூர் மாவட்டத்தில் ஆட்டோக்களை இயக்க அனுமதி வழங்கக்கோரி ஆட்டோ ஓட்டுநர்கள் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஆட்டோக்களை  இயக்க அனுமதி வழங்கக்கோரி சிஐடியூ சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மோட்டார் சங்க மாவட்டச் செயலாளர் ஒய்.அன்பு, மாவட்டத் தலைவர் எஸ்.விஸ்வநாதன், ஆட்டோ சங்க நிர்வாகிகள் சுகுமாரன் உள்ளிட்ட முக்கிய  நிர்வாகிகள் பங்கேற்றனர். 

இதில், பங்கேற்றவர்கள் கூறியதாவது:

திருப்பூர் மாவட்டத்தில் 2,500க்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட ஆட்டோக்கள் பர்மிட் அடிப்படையில் இயங்கி வருகின்றன. இந்த நிலையில், கரோனா பொது முடக்கம்  காரணமாகத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மிகக்கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

எனவே ஆட்டோ தொழிலாளர்களுக்கு ரூ.15 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும், இனி சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து ஆட்டோக்களை இயக்க அனுமதி வழங்க வேண்டும். முடிதிருத்தும் தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்தவர்கள், பதிவு செய்யாதவர்களுக்கும் கூட நிவாரணம் அளிக்கப்படுவதை வரவேற்கிறோம். அதேபோல் ஆட்டோ மற்றும் மோட்டார் தொழிலாளர்களுக்கும் நலவாரியத்தில் பதிவு செய்திருந்தாலும், செய்யாவிட்டாலும் நிவாரணத் தொகை வழங்க வேண்டும்.

4ஆவது கட்ட பொதுமுடக்கத்தில் ஆட்டோ மற்றும் இலகு ரக சரக்கு வாகனங்களை இயக்க அனுமதி கிடைக்கும் என எதிர்பார்த்திருந்தும், அனுமதி வழங்கப்படவில்லை. ஆகவே, வருமானம் இழந்து தவிக்கும் மோட்டார் மற்றும் ஆட்டோ தொழிலாளர்களுக்கு சமூக இடைவெளியோடு ஆட்டோ, இலகரக வாகனங்களை இயக்க அனுமதி வழங்க வேண்டும் என்றனர். இதே கோரிக்கைகளை வலியுறுத்த மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com