மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

தமிழகத்தில் புதிதாக 1,149 பேருக்கு கரோனா தொற்று

​தமிழகத்தில் புதிதாக 1,149 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (ஞாயிற்றுக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image
காசிமேடு
Updated On :31 மே 2020, 1:13 pm

DIN


தமிழகத்தில் புதிதாக 1,149 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (ஞாயிற்றுக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிப்புக்குள்ளானோர் மற்றும் பலியானோர் உள்ளிட்டவை அடங்கிய சமீபத்திய தகவல்களை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. இதன்படி, தமிழகத்தில் புதிதாக 1,149 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தில் மட்டும் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டோர் 1,054. பிற நாடுகள் மற்றும் பிற மாநிலங்களிலிருந்து வந்தவர்களில் கரோனா தொற்று இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டோர் 95. 

இதைத் தொடர்ந்து மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 22,333 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று மொத்தம் பாதித்தோரில் அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 804 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இன்று மேலும் 13 பேர் பலியானதைத் தொடர்ந்து மொத்தம் பலியானோரின் எண்ணிக்கை 173 ஆக உள்ளது. அதேசமயம், இன்று ஒரே நாளில் மொத்தம் 757 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 12,757 பேர் குணமடைந்துள்ளனர். இன்றைய தேதியில் மொத்தம் 9,400 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று ஒருநாள் மட்டும் 12,049 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 4,69,282 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.