அமைச்சர் துரைக்கண்ணு மறைவு: பிரதமர் மோடி இரங்கல்
தமிழக வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணுவின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.


தமிழக வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணுவின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தமிழக வேளாண்மைத் துறை அமைச்சா் துரைக்கண்ணு(72) சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை(அக்.31) இரவு காலமானார்.
அவரது மறைவுக்கு ஆளுநர், முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் என பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில்,
தமிழக வேளாண் அமைச்சர் துரைக்கண்ணு மறைவு வருத்தமளிக்கிறது. சமூக சேவைக்காகவும், விவசாயிகளுக்கு அங்கீகாரம் கிடைக்கவும் அவர் குறிப்பிடத்தக்க முயற்சிகளை மேற்கொண்டார். இந்த நேரத்தில் அவரது குடும்பத்தினருக்கும், ஆதரவாளர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...