முன்னாள் டிஜிபி கே. ராதாகிருஷ்ணன் மறைவு: முதல்வர் இரங்கல்
தமிழ்நாடு காவல்துறை முன்னாள் தலைமை இயக்குநர் கே. ராதாகிருஷ்ணன் உடல்நலக் குறைவால் இன்று காலமானார்.


தமிழ்நாடு காவல்துறை முன்னாள் தலைமை இயக்குநர் கே. ராதாகிருஷ்ணன் உடல்நலக் குறைவால் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 92
மறைந்த கே. ராதாகிருஷ்ணன், சென்னை மாநகர காவல் ஆணையர், காவல்துறை தலைவர் மற்றும் காவல்துறை இயக்குநர், உளவுப்பிரிவு டிஐஜி போன்ற உயர்ந்த பதவிகளை வகித்து, சிறப்பாக பணியாற்றியவர். எழுத்தாளர், சமூக ஆர்வலர் என பன்முகத் தன்மை கொண்ட கே. ராதாகிருஷ்ணன், நகைச்சுவை கட்டுரைகளையும் எழுதியவர்.
உடல் நலக் குறைவு காரணமாக சென்னையில் இன்று அவர் காலமானார். அவரது மறைவுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
முதல்வர் வெளியிட்டிருக்கும் இரங்கல் செய்தியில், தமிழ்நாடு காவல்துறை முன்னாள் தலைமை இயக்குநர் கே. ராதாகிருஷ்ணன் உடல் நலக் குறைவால் இன்று காலமானார் என்ற செய்தியை அறிந்து வேதனை அடைந்தேன்.
கே. ராதாகிருஷ்ணன், சென்னை மாநகர காவல் ஆணையர், காவல்துறை தலைவர் மற்றும் எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் காவல்துறை இயக்குநர் போன்ற உயர்ந்த பதவிகளில் நியமனம் செய்யப்பட்டு, திறம்பட பணியாற்றியவர் என்ற பெருமைக்குரியவர். இவர் எழுத்தாளர் உள்பட பன்முகத் தன்மை கொண்டவர். இவர் ராக்கி என்ற பெயரில் நகைச்சுவை கட்டுரை எழுதியவர்.
ராதாகிருஷ்ணன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பார எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...