பல்லடம் அருகே வலையபாளையத்தில் 3 ஆயிரம் கிலோ குட்கா பறிமுதல்: 4 பேர் கைது
பல்லடம் அருகே வலையபாளையத்தில் குட்கா புகையிலை விற்பனை செய்த 4 பேரை மங்கலம் போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே வலையபாளையத்தில் தனியார் விசைத்தறி குடோனில் இருந்து போலீஸாரால் கைப்பற்றப்பட்ட 3 ஆயிரத்து 690 கிலோ எடையுள்ள அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலைப் பொருள்கள்.











