ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

மக்களின் நலன் கருதி வேல் யாத்திரையை பாஜக கைவிட வேண்டும்: அமைச்சர் ஜெயக்குமார்

மக்களின் நலன் கருதி வேல் யாத்திரையை பாஜக கைவிட வேண்டும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

News image
கோப்புப் படம்
Updated On :5 நவம்பர் 2020, 11:09 am

DIN

மக்களின் நலன் கருதி வேல் யாத்திரையை பாஜக கைவிட வேண்டும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், 

பாஜகவின் வேல் யாத்திரை போன்ற ஊர்வலங்களால் கரோனா அதிகம் பரவ வாய்ப்புள்ளது. வேல் யாத்திரை மூலம் மக்களுக்கு கரோனா ஏற்படும் அபாயம் உள்ளதை கருத்தில் கொண்டே தமிழகத்தில் வேல் யாத்திரைக்கு அனுமதி வழங்கப்படவில்லை. பொதுமக்களின் நலனை காக்க வேண்டியது அரசின் கடமை.

சட்டத்திற்கு கட்டுப்பட்டு அனைவரும் நடக்க வேண்டும். மக்களின் நலன் கருதி பாஜக வேல் யாத்திரையை கைவிடுவது நல்லது. சட்டத்தை மீறினால் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.