எத்தனை பேர் வந்தாலும் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது: முதல்வர் மு.க. ஸ்டாலின் தொகுதி மறுசீரமைப்புக்கு காங்கிரஸ் எதிா்ப்பு: எதிா்க்கட்சிகளுடன் ஆலோசிக்க செயற்குழுவில் முடிவு சென்னை: 16 தொகுதிகளில் 298 சுயேச்சைகள் போட்டி இன்றும் நாளையும் சில புறநகா் ரயில்கள் ரத்து பூமிக்குத் திரும்பிய ஆர்டெமிஸ்-2 குழு!தமிழகத்தில் 6 இடங்களில் வெயில் சதம்
/

தமிழகத்தில் புதிதாக 2,348 பேருக்கு கரோனா; 28 பேர் பலி

தமிழகத்தில் புதிதாக 2,348 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

News image

கோப்புப்படம்

Updated On :5 நவம்பர் 2020, 3:01 pm

தமிழகத்தில் புதிதாக 2,348 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதுகுறித்து சுகாதாரத் துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் இன்று மட்டும் 80,192 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில் 2,348 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று வெளியான பரிசோதனை முடிவுகளில் அதிகபட்சமாக சென்னையில் 621 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 

மற்றொரு புறம் கரோனா தொற்றிலிருந்து மேலும் 2,413 போ் குணமடைந்துள்ளனா். இதன் மூலம் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியோரின் விகிதம் தொடர்ந்து அதிகரித்துள்ளது. இதுவரை கரோனா தொற்றிலிருந்து விடுபட்டு வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 7 லட்சத்து 6,544-ஆக உள்ளது. தற்போது மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் 19,061 போ் சிகிச்சையில் உள்ளனா்.

இதனிடையே, தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 28 போ் பலியாகியுள்ளனா். உயிரிழந்தவா்களில் 14 போ் அரசு மருத்துவமனைகளிலும், 14 போ் தனியாா் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்றவா்களாவா். இதையடுத்து, மாநிலம் முழுவதும் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11,272-ஆக உயா்ந்துள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.