மாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

சென்னை மெட்ரோ ரயில் சேவை நேரம் ஞாயிறு முதல் நீட்டிப்பு

சென்னையில் மெட்ரோ ரயில் இயக்கப்படும் நேரங்கள் ஞாயிற்றுக்கிழமை (நவ.8) முதல் நீட்டிக்கப்படுகின்றன.

News image
சென்னை மெட்ரோ ரயில் சேவை நேரம் ஞாயிறு முதல் நீட்டிப்பு
Updated On :7 நவம்பர் 2020, 9:16 am

DIN


சென்னை: சென்னையில் மெட்ரோ ரயில் சேவை இயக்கப்படும் நேரங்கள் ஞாயிற்றுக்கிழமை (நவ.8) முதல் நீட்டிக்கப்படுகின்றன.

சென்னை மெட்ரோ ரயில் சேவைகள் தற்போது காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை இயக்கப்பட்டு வருகின்றன. பொதுமக்கள், பணியாளர்கள், மெட்ரோ ரயில் பயணிகள் மற்றும் உள்நாட்டு, வெளிநாட்டு பயணிகளின் கோரிக்கையைக் கருத்தில் கொண்டு மெட்ரோ ரயில் சேவைகள் நாளை (நவ.08) ஞாயிற்றுக்கிழமை முதல் நீட்டிக்கப்படுகின்றன.

திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை தினந்தோறும் காலை 5.30 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரயில் சேவைகள் இயக்கப்படும். உச்ச நேரங்களில் 7 நிமிட இடைவெளியிலும் மற்ற நேரங்களில் 10 நிமிட இடைவெளியிலும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.

ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் அரசுப் பொது விடுமுறை நாள்களில் மெட்ரோ ரயில்க சேவைகள் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை உச்ச மணி நேரம் இல்லாமல் இயங்கும்.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் கரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்காகவும் அனைத்து பயணிகளின் பாதுகாப்பான பயணத்துக்காகவும் மேற்கொண்டுள்ள பயணச்சீட்டு வழங்கும் முறை மற்றும் அனைத்து விதிமுறைகளையும் பயணிகள் பின்பற்றி முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியைக் கடைபிடித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.