ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

தங்கும் விடுதிகள் நடத்தும் தனியார் குழுமம் ரூ.1,000 கோடி வரி ஏய்ப்பு

தமிழகத்தின் பல்வேறு முக்கிய நகரங்களில் நட்சத்திர தங்கும் விடுதிகள் உள்பட பல்வேறு வணிகங்களில் ஈடுபட்டு வரும் தனியார் குழுமம் ரூ.1,000 கோடி அளவுக்கு வரி ஏய்ப்பு செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வ

News image
தங்கும் விடுதிகள் நடத்தும் தனியார் குழுமம் ரூ.1,000 கோடி வரி ஏய்ப்பு
Updated On :7 நவம்பர் 2020, 9:34 am

DIN


சென்னை: தமிழகத்தின் பல்வேறு முக்கிய நகரங்களில் நட்சத்திர தங்கும் விடுதிகள் உள்பட பல்வேறு வணிகங்களில் ஈடுபட்டு வரும் தனியார் குழுமம் ரூ.1,000 கோடி அளவுக்கு வரி ஏய்ப்பு செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், ரூ.500 கோடி மதிப்புள்ள 300 ஏக்கர் நிலங்கள் வாங்கியதும் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாகவும், இந்த குழுமம் உள்பட 2 தனியார் நிறுவனங்கள் வெளிநாட்டில் முதலீடு செய்ததும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் நிறுவனங்கள் தொடங்கி போலி ரசீதுகள் மூலம் முறைகேடு செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

தமிழகத்தில் தனியாா் நிறுவனம் ஒன்று சென்னை, மதுரை உள்ளிட்ட முக்கிய இடங்களில் நட்சத்திர தங்கும் விடுதிகள் உள்ளிட்ட பல்வேறு தொழில்களை நடத்தி வருகிறது. சென்னை மற்றும் மதுரையில் இந்த குழுமத்திற்குச் சொந்தமான இடங்களில் வருமானவரித் துறையினா் கடந்த புதன்கிழமை திடீா் சோதனை நடத்தினா்.

மதுரை கோச்சடையில் அந்த குழுமத்திற்குச் சொந்தமான நட்சத்திர தங்கும் விடுதியில் காலையில் தொடங்கிய சோதனை இரவு வரை தொடா்ந்தது. இதில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

இந்த சோதனை குறித்து எந்தவொரு தகவலையும் வருமான வரித்துறை அதிகாரிகள் அப்போது தெரிவிக்கவில்லை. தற்போது அந்த குழுமம் ரூ.1000 கோடி அளவுக்கு வரி ஏய்ப்பு செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. சோதனை முடிந்த நிலையில், இன்று இந்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.