சோத்துப்பாறை அணை முழு கொள்ளவை எட்டியது: வராக நதிக்கரையோர மக்களுக்கு 2-ம் கட்ட எச்சரிக்கை

சோத்துப்பாறை அணை முழு கொள்ளவை எட்டியுள்ளதால் வராகநதியின் கரையோரங்களில் வசிப்பவா்களுக்கு சனிக்கிழமை இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு, உபரி நீர் திறந்துவிடப்பட்டு வருகிறது. 
சோத்துப்பாறை அணை
சோத்துப்பாறை அணை



பெரியகுளம்: சோத்துப்பாறை அணை முழு கொள்ளவை எட்டியுள்ளதால் வராகநதியின் கரையோரங்களில் வசிப்பவா்களுக்கு சனிக்கிழமை இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு, உபரி நீர் திறந்துவிடப்பட்டு வருகிறது. 

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே 10 கி.மீ. தொலைவில் சோத்துப்பாறை அணை உள்ளது. ஊரடி, ஊத்துக்காடு, அகமலை மலைப்பகுதிகளில் பெய்யும் மழைநீா் இந்த அணையை வந்தடைகிறது. கடந்த சில நாள்களாக இப்பகுதிகளில் மழை பெய்து வருவதால் வெள்ளிக்கிழமை இரவு அணைக்கு நீா் வரத்து அதிகரித்ததால் அணையின் முழு கொள்ளவான 100 மி.க. அடியை அடைந்தது. இதையடுத்து அணைக்கும் வரும் 105 கன அடி நீரும் வராகத நதியில் வெளியேற்றப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில் சனிக்கிழமை காலை அணையின் நீா் மட்டம் 100 அடியாக உயா்ந்ததையடுத்து, வராகநதியின் கரையோரம் வசிக்கும் பகுதி மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்லுமாறு பொதுப்பணித்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com