சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே மல்லப்பனூர் பிரிவு சாலையில் காவிரி -சரபங்க நீரேற்றுத் திட்டத்தை விளைநிலங்கள் பாதிக்காமல் கொண்டு செல்ல வேண்டி கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு விவசாயிகள் சங்க சேலம் மாவட்ட துணைத்தலைவர் தங்கவேலு தலைமையில் இன்று நடைபெற்றது.
மேட்டூர் அணையின் உபரி நீரை வறண்ட 100 ஏரிகளுக்கு நிரப்பும் திட்டம் ரூ. 525 கோடி செலவில் நடைபெறுகிறது. இத்திட்டத்திற்காக 2,466 விவசாயிகளிடம் இருந்து 276 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படுகிறது.
மேட்டூர், ஓமலூர், எடப்பாடி, சங்ககிரி தாலுகாக்களில் உள்ள ஏரிகளுக்கு தண்ணீரைக் கொண்டு செல்வதற்கு இயற்கை நீர்வழிப் பாதைகள் உள்ளன. அந்த நீர் வழிப் பாதைகளை தவிர்த்து விவசாயிகள் பாதிக்கும் வகையில் விளைநிலங்கள் வழியாக கொண்டு செல்லப்படுவதைக் கண்டித்தும் இந்த கருப்புக் கொடி ஏந்திய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விவசாயிகளுக்கு கருத்துக் கேட்பு மற்றும் ஆட்சேபனை நோட்டீஸ் வினியோகித்து 60 நாள் காலக்கெடு இருக்கும்பொழுது முன்னதாகவே காவல்துறையை வைத்து வருவாய்த் துறை அதிகாரிகள் விவசாயிகளை மிரட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் இந்த கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நேற்று இரவில் திடீரென வருவாய்த்துறை, காவல்துறை அதிகாரிகள் விவசாய நிலத்தை பார்வையிட வந்ததால் விவசாயிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணைத் தலைவர் தங்கவேலு தலைமையில் நடைபெற்ற கருப்புக் கொடி ஏந்திய ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர். தமிழக அரசை கண்டித்தும் வருவாய்த்துறை அதிகாரிகளை கண்டித்தும் விவசாயிகள் கோஷமிட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

நீச்சல் குளத்தில் குளித்த கல்லூரி மாணவா் உயிரிழப்பு

பிளஸ் 2 மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு: 5 பேரிடம் டிஎன்ஏ பரிசோதனை

வடமாநில தொழிலாளா்களின் தங்குமிடமாக மாறிய அரசுக் கட்டடம்: பொதுமக்கள் குற்றச்சாட்டு!

கழிவுநீரை வெளியேற்றும் தனியாா் ஆலை மீது நடவடிக்கை கோரி மனு
வீடியோக்கள்

”விஜய்யுடன் கூட்டணியா? இபிஎஸ் சொல்வதே இறுதிக் கருத்து!” - கரூரில் அண்ணாமலை பேட்டி
தினமணி வீடியோ செய்தி...

பணம் கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடுகள், தேர்தல் நடத்தை விதிகள் பற்றி விளக்கிய Archana Patnaik
தினமணி வீடியோ செய்தி...

திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீட்டில் சிக்கலா? | DMK Alliance | MK Stalin | N Ramasubramanian
தினமணி வீடியோ செய்தி...

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

