மேட்டூர் அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு
காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழையால், மேட்டூர் அணைக்கு வரும் நீா்வரத்து வினாடிக்கு 15,670 கன அடியாக அதிகரித்துள்ளது.


காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழையால், மேட்டூர் அணைக்கு வரும் நீா்வரத்து வினாடிக்கு 15,670 கன அடியாக அதிகரித்துள்ளது.
கா்நாடகத்தில் காவிரி நீா்பிடிப்புப் பகுதியிலும், தமிழக காவிரி கரையோரப் பகுதியிலும் தற்போது மழை பெய்து வருவதால், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு சனிக்கிழமை காலை 7, 924 கன அடியாகவும் ஞாயிற்றுக்கிழமை காலை வினாடிக்கு 15, 670 கன அடியாகவும் அதிகரித்துள்ளது.
அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 12,000 கன அடி நீரும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 800 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 59.09 டி.எம்.சி யாக இருந்தது.
பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவை விட அணைக்கு வரும் நீரின் அளவு அதிகமாக உள்ளதால் சனிக்கிழமை காலை 95.25 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை 95.44 அடியாக உயர்ந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...