கூத்தாநல்லூர்: பயிர் காப்பீட்டுத் தொகை ரூ.50 லட்சம் கொடுக்கப்படாமல் தாமதம்
திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் பகுதியில், பயிர் காப்பீட்டுத் தொகை ரூ.50 லட்சம் வழங்கப்படாமல் தாமதப்படுத்தி வருகின்றனர்.


கூத்தாநல்லூர்: திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் பகுதியில், பயிர் காப்பீட்டுத் தொகை ரூ.50 லட்சம் வழங்கப்படாமல் தாமதப்படுத்தி வருகின்றனர்.
இது குறித்து, கூத்தாநல்லூர் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி நகரச் செயலாளரும், விவசாயியுமான எம்.சுதர்ஸன் கூறியது. 2018 - 19 ஆண்டின் பச்சைப் பயறு, உளுந்து உள்ளிட்டவைகளுக்கு காப்பீட்டுப் பணம் கொடுக்கப்படவில்லை. 100 பேரில் 60 பேருக்குத்தான் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. 40 பேருக்கு வழங்காமல் தாமதப்படுத்தி வருகின்றனர். அதிகாரிகளை அணுகி கேட்டால், எழுதி அனுப்பியுள்ளோம். வந்தால்தான் சொல்ல முடியும் என அலட்சியமாக சொல்லுகிறார்கள். தட்டிக் கழிப்பதற்கான பதிலைத்தான் சொல்லுகிறார்கள்.
2020-ஆம் ஆண்டுக்கு காப்பீடு கொடுக்கக் கூடிய நேரமும் வந்து விட்டது. வரும் 30-ஆம் தேதிக்குள் காப்பீடு செய்யச் சொல்லி அறிவித்து விட்டார்கள். ஏற்கெனவே உள்ளதையே கொடுக்கப்படாமல் இருக்கிறது. மறுபடியும் காப்பீடு செய்யச் சொல்லிச் சொல்கிறார்கள். விவசாயிகள் பல வழிகளிலும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர். விவசாயத்தில் போடும் முதலீடு என்பது, மீண்டும் கைக்கு கிடைத்தால்தான் உண்டு. இயற்கையை நம்பி போடக்கூடிய முதலாகி விட்டது. போர்க்கால அடிப்படையில் தீபாவளிக்குள் காப்பீட்டுப் பணத்தை வழங்க வேண்டும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...