மாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

தில்லி தமிழ்ப் பள்ளியில் அம்மா கட்டடம்: திறந்து வைத்தார் முதல்வர் 

தில்லித் தமிழ்க் கல்விக் கழகத்தின் சார்பில் தில்லியில் உள்ள மயூர் விகார் பள்ளி வளாகத்தில் ஜெயலலிதா பெயரில் புதிதாக கட்டப்பட்டுள்ள பள்ளிக் கட்டடத்தை தமிழக முதல்வர் தொடக்கி வைத்தார்.

News image
தில்லி தமிழ்ப் பள்ளியில் அம்மா கட்டடம்: திறந்து வைத்தார் முதல்வர்
Updated On :12 நவம்பர் 2020, 12:55 pm

DIN


எடப்பாடி கே. பழனிசாமி இன்று (12.11.2020) தில்லித் தமிழ்க் கல்விக் கழகத்தின் சார்பில் தில்லியில் உள்ள மயூர் விகார் பள்ளி வளாகத்தில் ஜெயலலிதா பெயரில் புதிதாக கட்டப்பட்டுள்ள அம்மா பள்ளிக் கட்டடத்தை காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்.

தலைநகர் தில்லியில் கடந்த 90 ஆண்டுகளாக தில்லித் தமிழ்க் கல்விக் கழகத்தால் ஏழு இடங்களில் மொழிவாரி சிறுபான்மையின மேல்நிலைப் பள்ளிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இப்பள்ளிகளில், முதல் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை தமிழ் மொழி கட்டாயப் பாடமாகவும், ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்புகளில் விருப்பப் பாடமாகவும் பயிற்றுவிக்கப்படுகிறது. இப்பள்ளிகளில் பயிலும் சுமார் 7,500 மாணாக்கர்களில் 85 சதவிகிதம் தமிழர்கள் ஆவர். 

இப்பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்களுக்கு ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் மூலம் தமிழ்ப் பாடப் புத்தகங்களை விலையில்லாமல் வழங்கி வருகிறது.

தில்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 15 லட்சம் தமிழர்கள் வசிக்கிறார்கள். பெருகிவரும் தமிழ் மக்களின் எண்ணிக்கையினை கருத்தில் கொண்டு, தில்லி வளர்ச்சிக் குழுமத்தால், தில்லித் தமிழ்க் கல்விக் கழகத்திற்கு மயூர் விகாரில் புதிய பள்ளிக் கட்டடம் கட்டுவதற்கு நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. மயூர் விகாரில் பள்ளிக் கட்டடம் கட்டுவதற்கு நிதியுதவி வேண்டி, தமிழக முதல்வரிடம் தில்லித் தமிழ்க் கல்விக் கழகம் கோரிக்கை வைத்தது.

அக்கோரிக்கையினை கனிவுடன் ஏற்று, தில்லித் தமிழ்க் கல்விக் கழகத்தின் சார்பில் தில்லியில் உள்ள மயூர் விகாரில் கட்டப்படவுள்ள பள்ளிக் கட்டடத்திற்கு தமிழ்நாடு அரசின் சார்பில் 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து, கடந்த  26.10.2018 அன்று அம்மா பெயரில் கட்டப்படவுள்ள பள்ளிக் கட்டடத்துக்கு தமிழக முதல்வர் காணொலிக் காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.

தில்லித் தமிழ்க் கல்விக் கழகத்தின் சார்பில் தில்லியில் உள்ள மயூர் விகார் பள்ளி வளாகத்தில் அம்மா பெயரில் புதிதாக கட்டப்பட்டுள்ள பள்ளிக் கட்டடத்தை தமிழக முதல்வர் பழனிசாமி இன்று காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார். இப்புதிய பள்ளிக் கட்டடம் 6515 சதுர மீட்டர் பரப்பளவில், தரை மற்றும் நான்கு தளங்களுடன் கட்டப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில், பள்ளிக்கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர்  கே.ஏ.செங்கோட்டையன், தமிழ் ஆட்சிமொழி, தமிழ்ப் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் க. பாண்டியராஜன், புது தில்லிக்கான தமிழ்நாடு அரசின் சிறப்பு பிரதிநிதி என். தளவாய் சுந்தரம், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவர் பா.வளர்மதி, தலைமைச் செயலாளர் க. சண்முகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.