ஆம்பூரில் பட்டாசு கடையின் பூட்டு உடைத்து திருட்டு
ஆம்பூரில் புதிதாக திறக்கப்பட்ட பட்டாசு கடையின் பூட்டை உடைத்து ரூ.1 லட்சம் மதிப்பிலான பட்டாசுகள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.


ஆம்பூர்: ஆம்பூரில் புதிதாக திறக்கப்பட்ட பட்டாசு கடையின் பூட்டை உடைத்து ரூ.1 லட்சம் மதிப்பிலான பட்டாசுகள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சாய் சக்தி திரையரங்கம் அருகில் புதிதாக திறக்கப்பட்ட சக்தி பட்டாசு கடை புதன்கிழமை இரவு வழக்கம் போல மூடப்பட்டது. வியாழக்கிழமை காலை கடையை திறக்க வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு ரூ.1 லட்சம் மதிப்பிலான பட்டாசுகள் மற்றும் ரூ.10 ஆயிரம் ரொக்கப் பணம் திருட்டுப் போயிருந்தது தெரிய வந்தது.
இதுகுறித்து ஆம்பூர் நகர காவல் நிலைய காவலர்கள் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...