கிருஷ்ணகிரி அருகே சாலை விபத்து: 2 இளைஞர்கள் சாவு
கிருஷ்ணகிரி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 2 இளைஞர்கள் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.


கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 2 இளைஞர்கள் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.
கர்நாடகம் மாநிலம், பெங்களூரு கத்திரிகுப்பத்தை சேர்ந்த சந்திரனின் மகன் பாபு (22), பெங்களூரு லட்சுமணபுரியை சேர்ந்த விஸ்வநாத்தின் மகன் பால் எபினேசர்(22). இவர்கள் இருவரும் ஒரு இருசக்கர வாகனத்தில் பெங்களூருவிலிருந்து சென்னைக்கு நோக்கி வந்துகொண்டிருந்தனர்.
இன்று அதிகாலை கிருஷ்ணகிரியை அடுத்த ஒரப்பம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் வந்துகொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில், பாபு, பால் எபினேசர் ஆகிய இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.
தகவலறிந்த காவல்துறையினர் நிகழ்விடத்துக்கு விரைந்து சென்று சடலங்களை மீட்டு கிருஷ்ணகிரி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து கந்திகுப்பம் காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...