தம்மம்பட்டி: மழை பெய்யாததால் நெற்பயிர் விவசாயிகள் ஏமாற்றம்
சேலம் மாவட்டம் தம்மம்பட்டி பகுதியில் போதிய மழை பெய்யாததால், நெல் பயிரிட காத்திருந்த விவசாயிகள் பெரிதும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்


தம்மம்பட்டி: சேலம் மாவட்டம் தம்மம்பட்டி பகுதியில் போதிய மழை பெய்யாததால், நெல் பயிரிட காத்திருந்த விவசாயிகள் பெரிதும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
ஆண்டுதோறும் பருவமழைக் காலங்களில், பெய்யும் மழையின் அளவை பொறுத்து, விவசாயக் கிணறுகளில் நீர் மட்டம் உயர்ந்திருக்கும். அதைப் பயன்படுத்தி, விவசாயிகள் அதிகளவில் நெல் நடவு செய்வார்கள்.
ஆறு, ஏரி தண்ணீர் பாசனத்தை நம்பி நெல் நடவு செய்யும் ஆயக்கட்டு விவசாயிகளும், முழு பரப்பளவில் நெல் பயிரிடுவார்கள். ஆனால், இந்தாண்டு, தம்மம்பட்டி சுற்றுவட்டாரப் பகுதியில், போதிய அளவுக்கு பருவமழை பெய்யாததால், தம்மம்பட்டி சுவேதநதியில் பெரிய அளவில் வெள்ளப் பெருக்கு ஏற்படவில்லை, ஏரிகள் நிரம்பவில்லை.
அதனால், இப்பகுதியில் உள்ள விவசாயக் கிணறுகளில், எதிர்பார்த்த அளவிற்கு நீர்மட்டம் உயராததால், நெல் பயிரிட தயார்நிலையில் காத்திருந்த விவசாயிகள், தற்போது மாற்றுப் பயிர்களை பயிரிட்டுள்ளனர்.
ஆயக்கட்டு பாசன விவசாயிகளும் பெரிதும் ஏமாற்றம் அடைந்து, தற்போது மாற்றுப் பயிர்களை சாகுபடி செய்து வருகின்றர்.
இதுகுறித்து, தம்மம்பட்டி விவசாயிகள் கூறியதாவது, ஆண்டுதோறும், செப்டம்பர், அக்டோபர் மாதத்தில் மழை முழு வீச்சில் பெய்யத் துவங்கி, கிணறுகளில் நீர்மட்டம் உயரத் துவங்கினால், நெல் நடவுப் பணிகளை துவங்கி விடுவோம். இந்த ஆண்டு, நெல் நடவு செய்யும் அளவிற்கு போதிய மழை பெய்யவில்லை. அதனால், தற்போது மாற்றுப் பயிர்களை பயிரிட்டு வருகிறோம், என்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...