தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

சென்னையில் அதிகாலை முதல் பரவலாக மழை

சென்னையில் அதிகாலை முதல் பல்வேறு பகுதிகளில் பரவலாக லேசான முதல் மிதமான மழை பெய்து வருகிறது.

News image
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
Updated On :15 நவம்பர் 2020, 3:51 am

DIN


சென்னை: சென்னையில் அதிகாலை முதல் பல்வேறு பகுதிகளில் பரவலாக லேசான முதல் மிதமான மழை பெய்து வருகிறது.

வங்கக்கடலில் நிலவும் மேலடுக்கு சுழற்சி தமிழக கடற்பகுதி நோக்கி நகர்வதன் காரணமாக ஞாயிற்றுக்கிழமை (நவ.15) தமிழகம், புதுச்சேரியில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் , கடலோர மாவட்டங்களில் அநேக இடங்களில் மிதமான மழையும், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும் பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்து.  

இந்நிலையில்,  ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதல் சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. 

சென்னை அம்பத்தூர், ஆவடி, பட்டாபிராம், பாடி, கொளத்தூர், அண்ணா நகர், அண்ணாசாலை, திருவல்லிக்கேணி, ராயபேட்டை, தி.நகர், கிண்டி, அடையார், பெசண்ட் நகர், திருவான்மியூர், குரோம்பேட்டை  உள்ளிட்ட பகுதிகளில்   பரவலாக லேசான முதல் மிதமான மழை பெய்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.