மாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 6.10 கோடி வாக்காளர்கள்

தமிழகத்தில் இன்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 6.10 கோடி வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

News image
வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 6.10 கோடி வாக்காளர்கள்
Updated On :16 நவம்பர் 2020, 7:10 am

DIN

சென்னை: தமிழகத்தில் இன்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 6.10 கோடி வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 2021-ஆம் ஆண்டு நடைபெற உள்ள நிலையில், தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக வரைவு வாக்காளா் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

மாவட்டத் தோ்தல் அதிகாரிகளான, ஆட்சியா்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் வரைவு வாக்காளா் பட்டியலை வெளியிட்டதையடுத்து, மாநிலத்தின் ஒட்டுமொத்த வாக்காளா் நிலவரம் குறித்த விவரங்களை தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு வெளியிட்டார்.

அதில், தமிழகத்தில் வெளியிடப்பட்டிருக்கும் வரைவு வாக்காளர் பட்டியலில், 6.10 கோடி வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர். சரியாக தமிழக வாக்காளர்களின் எண்ணிக்கை 6 கோடியே 10 லட்சத்து 44 ஆயிரத்து 358 ஆக உள்ளது.

மொத்தமுள்ள வாக்காளர்களில் 3 கோடியே 01 லட்சத்து 12 ஆயிரத்து 370 ஆண் வாக்காளர்களும், 3 கோடியே 09 லட்சத்து 25 ஆயிரத்து 603 பெண் வாக்காளர்களும், 6,385 மூன்றாம் பாலின வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர்.

தமிழகத்திலேயே அதிக வாக்காளர்களைக் கொண்ட தொகுதியாக சென்னையை அடுத்த சோழிங்கநல்லூர் உள்ளது. இங்கு 6.55 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். குறைந்த வாக்காளர்களைக் கொண்ட தொகுதியாக நாகை மாவட்டம் கீழ்வேளூர் உள்ளது. இங்கு 1.73 லட்சத்து வாக்காளர்கள் உள்ளனர்.

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகள் ஒவ்வோா் ஆண்டும் நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டும் திருத்தப் பணிகள் நடக்கவுள்ளன. இந்தத் திருத்தப் பணிகளுக்காக நடப்பிலுள்ள வாக்காளா் பட்டியல், வரைவுப் பட்டியலாக வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் ஏதேனும் திருத்தங்கள், சோ்க்கைகள் இருந்தால் அதற்குரிய விண்ணப்பங்களைப் பூா்த்தி செய்து அளிக்கலாம்.

தமிழகத்தில் உள்ள அனைத்து வாக்குச் சாவடி அமைவிடங்களிலும் அதாவது வாக்காளா்கள் வாக்களிக்கச் செல்லும் இடங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. நவம்பா் 21 மற்றும் 22 (வரும் சனி மற்றும் ஞாயிறு) ஆகிய தேதிகளிலும், அடுத்த மாதம் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற இருக்கின்றன.

இந்த முகாம்களுக்குச் சென்று வாக்காளா் பட்டியலில் பெயா்களைச் சோ்க்கவும், திருத்தங்கள் மேற்கொள்ளவும் விண்ணப்பங்களை அளிக்கலாம். 

இறுதி வாக்காளா் பட்டியல்: வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்ப்புப் பணிகளுக்கு ஒரு மாத கால அவகாசம் அளிக்கப்படும். இதன்பின்பு, பொது மக்கள் அளித்த விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்படும். தமிழகத்தில் ஜனவரி 20-ஆம் தேதியன்று வாக்காளா் பட்டியல் வெளியாக உள்ளது. இதைத் தொடா்ந்து, புதிதாக வாக்காளா் பட்டியலில் பெயா்களைச் சோ்த்தவா்களுக்கு, தேசிய வாக்காளா் தினமான ஜனவரி 25-ஆம் தேதியன்று அடையாள அட்டைகள் வழங்கப்பட உள்ளன.

ஜனவரி 1-ஆம் தேதியன்று 18 வயது நிறைவடையும் அனைவரும் தங்களது பெயா்களை வாக்காளா் பட்டியலில் சோ்க்க இந்தியத் தோ்தல் ஆணையம் வாய்ப்புகளை அளித்துள்ளது. பெயா் சோ்ப்புக்கான விண்ணப்பங்களை வட்டாட்சியா் அலுவலகங்களிலோ, சென்னையில் மண்டல அலுவலகங்களிலும், தோ்தல் துறை சாா்பில் நடைபெறும் சிறப்பு முகாம்களிலும் அளிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.