திருச்சி இனிப்புக் கடை உரிமையாளர் மகன் தற்கொலை
திருச்சியில் பிரபல இனிப்புக் கடை உரிமையாளர் மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து தில்லைநகர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


திருச்சி: திருச்சியில் பிரபல இனிப்புக் கடை உரிமையாளர் மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தில்லைநகர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சியில் பிரபல இனிப்பு கடையின் உரிமையாளர் பத்ரிநாத் . இவரது மகன் முத்ரிநாத் (21). இவருக்குத் திருமணம் நிச்சயதார்த்தம் முடிவுற்று 20 நாளில் திருமணம் நடைபெற உள்ளது. இந்த திருமணத்தில் முத்ரிநாத்திற்கு உடன்பாடு இல்லை எனக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் இன்று காலை வயலூர் முருகன் கோவிலுக்கு சென்ற முத்ரிநாத் தரிசனம் செய்து விட்டு வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டு முதல் மாடியில் தனிமையில் இருந்த அவர் சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தில்லை நகர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...