சென்னை: செம்பரம்பாக்கம் ஏரி இப்போதைக்கு திறக்கப்படாது என்று பொதுப் பணித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் கடந்த சில நாள்களாக பரவலாக மழை பெய்து வந்ததால், 2015-ஆம் ஆண்டைப் போல செம்பரம்பாக்கம் அணை நிரம்பி, திறக்கப்பட்டுவிடுமோ என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் எழுந்தது.
இந்த நிலையில், செம்பரம்பாக்கம் ஏரியை பொதுப் பணித் துறை அதிகாரிகள் இன்று காலை நேரில் ஆய்வு செய்தனர்.
இதையும் படிக்கலாமே.. ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு வயது 356!
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பொதுப் பணித் துறையின் தலைமை பொறியாளர் அசோகன், 2015-ஆம் ஆண்டு பெய்ததைப் போல சென்னையில் தற்போது கனமழை பெய்யவில்லை. மழை பெய்து கொண்டிருந்த போது செம்பரம்பாக்கம் அணைக்கு நீர்வரத்து அதிகமாக இருந்தது. ஆனால் தற்போது மழை குறைந்ததால், நீர்வரத்தும் குறைந்துவிட்டது. செம்பரம்பாக்கத்துக்கு தற்போது 450 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.
இதையும் படிக்கலாம்.. மாற்று சக்தியாகுமா மக்கள் நீதி மய்யம்?
செம்பரம்பாக்கம் ஏரி தற்போதைக்கு திறக்கப்படாது. அதே வேளையில், ஏரியின் நீர்மட்டம் 22 அடியை தாண்டியதும் வெள்ள அபாய அறிவிப்பு வெளியிடப்பட்டு பிறகுதான் செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருச்செந்தூர், சீரடியைத் தொடர்ந்து வேளாங்கண்ணி, நாகூர் தர்கா செல்லும் விஜய்?!
விஜய்யுடன் சீரடி கோவிலுக்குச் சென்ற 2 பெண்கள் யார்?

நாட்டில் முதல்முறையாக ஏஐ அடிப்படையிலான பன்மொழி சேவைகள்: பெங்களூரு காவல்துறை அறிமுகம்!

கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி.. சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் சரிவு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


