சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

மதுராந்தகம் அருகே குஷ்பு கார் விபத்து: அதிர்ஷ்டவசமாக அனைவரும் உயிர் தப்பினர்

செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அருகே நடிகை குஷ்பு சென்ற கார் மீது கண்டெய்னர் லாரி மோதி விபத்துக்குள்ளானது.

News image
கண்டெய்னர் லாரி மோதி சேதமடைந்த குஷ்பு கார்.
Updated On :18 நவம்பர் 2020, 7:56 am

DIN

செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அருகே நடிகை குஷ்பு சென்ற கார் மீது கண்டெய்னர் லாரி மோதி விபத்துக்குள்ளானது.

பாஜக சார்பில் கடலூரில் நடத்தப்படும் வேல் யாத்திரையில் பங்கேற்பதற்காக நடிகை குஷ்பு சென்னையில் இருந்து காரில் புறப்பட்டு சென்றார். கார் செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அருகே சென்று கொண்டிருந்த போது, கண்டெய்னர் லாரி உரசி கார் விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் குஷ்பு காரின் முன்பகுதி முற்றிலுமாக சேதம் அடைந்த நிலையில், குஷ்பு லேசான காயத்துடனும், மற்றவர்கள் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர், இந்த விபத்து தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விபத்து குறித்து குஷ்பு கூறியதாவது:
கடலூரில் நடைபெறும் வேல் யாத்திரையில் பங்கேற்பதற்காக காரில் சென்றுகொண்டிருந்த போது, மேல்வருவத்தூர் அருகே ஒரு கண்டெய்னர் லாரி எங்கள் கார் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் அனைவரும் காயமின்றி தப்பித்தோம். காரின் கண்ணாடி உடைந்திருக்கிறது. இந்த விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

''உங்கள் ஆசீர்வாதங்களாலும் கடவுளின் கிருபையினாலும் நான் காப்பாற்றப்பட்டுள்ளேன். கடலூர் வேல்யாத்திரையில் பங்கேற்க சென்றுகொண்டிருந்த எங்களை அந்த முருகன்தான் காப்பாற்றியுள்ளார்.  என் கணவர் வணங்குகின்ற தெய்வம் எங்களை கைவிடவில்லை''.

விபத்துக்கு பின்னர் வேல் யாத்திரையை தொடர்கிறீர்களாக என்று கேட்டதற்கு, கடவுள் முருகனே என்னை சந்தித்துவிட்டு செல் என்று கூறிய பிறகு, நாங்கள் ஏன் நிற்க வேண்டும் என்று தெரிவித்த குஷ்பு, மாற்று கார் ஏற்பாடு செய்து கடலூர் புறப்பட்டு சென்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.